
இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடக்கம்! காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் திடீரென சுமார் 1 மணி நேரமாக செயல்படாமல் போனதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ரீல்ஸ் வீடியோ, இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்டேட்டஸ், தனிப்பட்ட மெசெஜ்களை நீக்கி கொள்வது என பல வசதிகளை கொண்ட இந்த தளம் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதனிடையில், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்கள் தங்களால் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்காவில் 46,000 க்கும் மேற்பட்ட பயனாளர்களும், இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்களும் வந்ததாக கூறப்படுகிறது.
பலரும் சமூக வலைத்தளங்களில் #instagramdown என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
இன்ஸ்டாகிராம் செயலி முடக்கம்
Me trying to fix my insta by deleting and reinstalling the app. #InstagramDown pic.twitter.com/3uaKx4MnIe
— michelle🪐 (@baglifemichiee) March 9, 2023