இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலர் பேடிஎம்ஃ கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை வைத்திருப்பார்கள். அனைத்து பேமண்ட்களையுமே மக்கள் எளிதாக பயன்படுத்த இச்செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பேடிஎம் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, Paytm UPI LITE என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி நொடிப்பொழுதில் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம். இதற்கு முன் நாம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு முதலில் பாஸ்வேர்ட் போட வேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம் ரூ. 200 வரை பேடிஎம் இல் PIN இல்லாமல் அனுப்பி கொள்ளலாம்.
UPI PIN இல்லாமல் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்த Paytm
இந்த வசதி Paytm wallet மூலமாக பணம் அனுப்பும்போது மட்டுமே கிடைக்கும். இந்த புது வசதியை ஆக்டிவேட் செய்பவர்களுக்கு 100 ரூபாய் வரை கேஷ் பேக் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த புதிய வசதிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், 2023 ஜனவரியில் 1,765.87 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுடன், நாட்டிலுள்ள அனைத்து முக்கிய வங்கிகளையும் விட Paytm Payments Bank தொடர்ச்சியாக 20 மாதங்களுக்கு UPI பயனாளிகள் வங்கியாக இருந்தது. NPCI-இன் சமீபத்திய அறிக்கையின்படி, 389.61 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுடன், UPI பரிவர்த்தனைகளுக்கான முதல் 10 பணம் அனுப்பும் வங்கிகளில் பேடிஎம்மும் ஒன்றாகும்.