LOADING...
மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20,000 பட்டதாரிகளுக்கு வேலை

மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 23, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி ஜாம்பவானான இன்ஃபோசிஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் சுமார் 20,000 கல்லூரி பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு

ஏஐ தேவையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

தற்போது உலகளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தேவை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இன்ஃபோசிஸ் தனது கவனத்தை ஏஐ சேவைகளை நோக்கித் திருப்பியுள்ளது: புதிய திட்டங்கள்: மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய அப்ளிகேஷன்களை ஏஐ மூலம் நவீனமயமாக்குதல் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நிதி நிறுவனங்கள்: இன்போசிஸின் 25 பெரிய வாடிக்கையாளர்களில் 15 நிறுவனங்கள் தங்களது ஏஐ பணிகளுக்காக இன்ஃபோசிஸையே தேர்ந்தெடுத்துள்ளன. உயர் சம்பளம்: ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட புதியவர்களுக்கு ஆண்டுக்கு ₹21 லட்சம் வரை சம்பளம் வழங்க இன்ஃபோசிஸ் முன்வந்துள்ளது.

வளர்ச்சி

தற்போதைய நிலவரம் மற்றும் வளர்ச்சி

2025-26 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே சுமார் 18,000 பட்டதாரிகளை இன்போசிஸ் பணியில் சேர்த்துள்ளது. டிசம்பர் காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. பாரம்பரியமான ஐடி பணிகள் சில இடங்களில் குறைந்தாலும், ஏஐ சார்ந்த புதிய பணிகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகச் சலில் பரேக் குறிப்பிட்டுள்ளார். ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் மனிதர்கள் இணைந்து பணியாற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப, தனது சேவைக்கான கட்டண முறைகளையும் இன்ஃபோசிஸ் மாற்றி அமைத்து வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் அங்குள்ள பெரிய நிறுவனங்களின் ஏஐ முதலீடுகள் இந்திய ஐடி துறைக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement