Page Loader
சிறப்பு சலுகையுடன் Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போன் வெளியீடு!
infinix zero 5g 2023 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

சிறப்பு சலுகையுடன் Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போன் வெளியீடு!

எழுதியவர் Siranjeevi
Feb 04, 2023
04:16 pm

செய்தி முன்னோட்டம்

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 11 ஆம் தேதி ப்ளிப்கார்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். Infinix Zero 5G 2023 போன் 50MP முதன்மை கேமரா, 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறைந்த விலையில் பட்ஜெட் போனை தேர்வு செய்ய இந்த Infinix Zero 5G 2023 வாங்கலாம். இந்த புதிய போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட்-இல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமானது. இந்த போன் பிளாக், ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் வெளியானது.

infinix zero 5g 2023

infinix zero 5g 2023; ஸ்மார்ட்போனி சிறப்பு அம்சம் விலை என்ன?

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 அவுட் இல் இது இயங்குகிறது. மேலும், 120Hz LCD பேனல், 50MP பிரதான கேமரா, 13GB வரை ரேம் மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போனானது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் கூடிய 6.78 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 1080 5ஜி எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும். பாதுகாப்பு வசதிக்கு என போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், பிரத்தியேகமான மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் உள்ளது. விலையை பொறுத்தவரை தோராயமாக ரூ.19,500 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் ஏறத்தாழ இதே விலைப்பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது