Loading...
விண்வெளிக்கும் ஆழ்கடலுக்குமான பயிற்சி! இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் விண்வெளி மையம்
இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் விண்வெளி மையம்

விண்வெளிக்கும் ஆழ்கடலுக்குமான பயிற்சி! இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் விண்வெளி மையம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2026
04:13 pm

செய்தி முன்னோட்டம்

விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆராய்ச்சிகளை ஒன்றிணைக்கும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் விண்வெளி பயிற்சி பணி திட்டமிடப்பட்டுள்ளது. ஆகா ஸ்பேஸ் என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் முதல்கட்ட 24 மணி நேரப் பரிசோதனை வரும் டிசம்பர் 2026-இல் குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 2027-இல் 72 மணி நேர நீட்டிக்கப்பட்ட சோதனையும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சாத்தியக் கூறு

நீருக்கடியில் விண்வெளி சூழல் எவ்வாறு சாத்தியம்?

விண்வெளியில் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் தனிமை மற்றும் குறுகிய இடங்களில் தங்கும் சூழலை நீருக்கடியில் செயற்கையாக உருவாக்க முடியும்.

எடையற்ற மிதப்பு நிலையை ஆராயவும் நீருக்கடி சூழல் பயன்படுகிறது.

இருப்பினும், விண்வெளியின் முழுமையான ஈர்ப்புவிசையற்ற நிலையையோ அல்லது வெற்றிடத்தையோ இங்கு உருவாக்க முடியாது.

வரும் காலங்களில் நீண்ட நாட்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையை ஆராய இந்த சோதனை பெரிதும் உதவும்.

கூட்டணி

ஆகா ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவின் கூட்டணி

இந்த திட்டத்தை ஆகா ஸ்பேஸ் நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து செயல்படுத்துகிறது.

ஆபத்தான சூழல்களில் மனிதர்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் இந்த சோதனையில் பரிசோதிக்கப்படும்.

மேலும், செயற்கை வாழ்விடங்களை வடிவமைத்தல் மற்றும் உயிா்காக்கும் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மனிதர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்க சுழற்சிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

ADVERTISEMENT

ஆழ்கடல் சமுத்திரயான் 

ஆழ்கடல் சமுத்திராயன் திட்டத்திற்கும் பெரும் உதவி

இந்த நீருக்கடி பயிற்சி இந்தியாவின் ககன்யான் விண்வெளித் திட்டத்திற்கு மட்டுமின்றி, சமுத்திராயன் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்திற்கும் பெரும் பயனுள்ளதாக அமையும்.

மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் அமைப்புகளுக்கு இத் தொழில்நுட்பங்கள் நேரடியாக உதவும்.

டிசம்பர் 2026-இல் நடத்தப்படும் முதல்கட்ட சோதனையின் முடிவுகள், எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி மற்றும் கடல்சார் திட்டங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

ADVERTISEMENT