NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்
    டாக்டர் சிவா அய்யாதுரை(இடது); எலன் மஸ்க்(வலது)

    ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 27, 2022
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மின்னஞ்சல் எனும் ஈமெயிலை கண்டுபிடித்த இந்தியரான டாக்டர் சிவா அய்யாதுரை, சமீபத்தில் எலன் மஸ்க்கிற்கு ஒரு வினோதமான ட்வீட் செய்திருந்தார்.

    அதில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும், தான் எம்ஐடி-யில் நான்கு பட்டங்கள் பெற்றுள்ளதாகவும், ஏழு வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியதாகவும், ட்விட்டர் CEO பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை என்ன என்றும் கேட்டுள்ளார்.

    இந்த ட்வீட்-ஐ மஸ்க்கிற்கு நேரடியாக டேக் செய்து, ட்வீட் செய்துள்ளார்.

    அய்யாதுரையின் ட்வீட் உடனடியாக பலர் கவனத்தை ஈர்த்தது. பலர் அவரது வேலை விண்ணப்பத்திற்கு, ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    எனினும், மஸ்கிடம் இருந்து இதுவரையில் எந்த பதிலும் இல்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    ட்விட்டர் ceo பதவிக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளர்

    Dear Mr. Musk(@elonmusk):

    I am interested in the CEO position @Twitter. I have 4 degrees from MIT have created 7 successful high-tech software companies. Kindly advise of the process to apply.

    Sincerely,

    Dr. Shiva Ayyadurai, MIT PhD
    The Inventor of Email

    m:1-617-631-6874

    — Dr.SHIVA Ayyadurai, MIT PhD. Inventor of Email (@va_shiva) December 24, 2022

    இந்த டிவீட்டிற்கான பின்கதை

    ட்விட்டர் ceo பதவிக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளர்

    சென்ற வாரம், மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பு நிகழ்த்தி இருந்தார். அதில் "எத்தனை பேர் நான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக ஆதரவு தெரிவிக்கிறீர்கள்?" எனக்கேட்டிருந்தார்.

    அந்த கருத்துக்கணிப்புக்கு, 57 %, அவர் பதவி விலகுவதை வரவேற்றனர்.

    பின்னர் மஸ்க், ஒரு தகுந்த நபரை தனக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரியாக தேடிக்கொண்டிருப்பதாகவும், கிடைத்தவுடன் பதவி விலக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    பலர் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    அய்யாதுரை அதன் தொடர்ச்சியாக தான் இந்த வேடிக்கையான ட்வீட் செய்துள்ளார்.

    அமெரிக்க வாழ் இந்தியரான, டாக்டர் சிவா அய்யாதுரை MIT பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உலகெங்கும் உபயோகிக்கப்படும் மின்னஞ்சலை இவர் தனது பதின் வயதில் கண்டுபிடித்தார் என செய்திகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ட்விட்டர்

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் பயனர் பாதுகாப்பு
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் பயனர் பாதுகாப்பு
    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு

    எலான் மஸ்க்

    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர் புதுப்பிப்பு
    எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா? ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025