இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நாட்டின் பரந்த திறமைகள் மற்றும் இளைஞர்களின் மக்கள்தொகையை மேற்கோள் காட்டி, உலகின் மிகப்பெரிய நுண்ணறிவுத்துறை சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்று கணித்துள்ளார்.
மும்பையில் நடந்த NVIDIA செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் சென்று, உலகளவில் ஏஐ சேவைகளை வழங்குவதற்கான திறனை கொண்டுள்ளதை எடுத்துரைத்தார்.
ஏஐ புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது என்று முகேஷ் அம்பானி வலியுறுத்தினார்.
இந்தியர்கள் முக்கிய உலகளாவிய நிறுவனங்களுக்கு சிஇஓக்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல், உலகத்தை மேம்படுத்த ஏஐ சார்ந்த சேவைகளையும் வழங்குவார்கள் என்று கணித்துள்ளார்.
நுண்ணறிவு புரட்சி
இந்தியாவின் நுண்ணறிவு புரட்சி
NVIDIA சிஇஓ ஜென்சன் ஹுவாங் பேசுகையில், முகேஷ் அம்பானியின் கருத்துக்களை ஆமோதித்தார். இந்தியா ஒரு காலத்தில் மென்பொருளை ஏற்றுமதி செய்வதில் பெயர் பெற்றிருந்தாலும், அது விரைவில் ஏஐ'ஐ ஏற்றுமதி செய்யும் என்று கூறினார்.
ஹுவாங் இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் NVIDIA இடையே ஒரு கூட்டாண்மையை அறிவித்தார்.
அம்பானி ஹுவாங்கை நுண்ணறிவுத் துறை புரட்சியை தொடங்கி வைத்துள்ளதாகப் பாராட்டினார்.
இது உலகளாவிய செழிப்பை உண்டாக்கும் என்று அவர் நம்புகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டினார்.
இந்தியாவை முதன்மையான டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரித்து, அதன் பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவால் இது சாத்தியமானது என்றார்.