Loading...
ஒட்டுமொத்த வேலையும் பறிபோகாது; ஏஐ தாக்கம் குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அதிமுக்கிய வெள்ளை அறிக்கை
ஏஐ தாக்கம் குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அதிமுக்கிய வெள்ளை அறிக்கை

ஒட்டுமொத்த வேலையும் பறிபோகாது; ஏஐ தாக்கம் குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அதிமுக்கிய வெள்ளை அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2026
06:34 pm

செய்தி முன்னோட்டம்

அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வேகமாக நுழைந்து வருகிறது. இந்நிலையில் ஏஐ எந்தெந்த வேலைகளைப் பறிக்கும் என்ற கேள்வி மிகவும் பரந்தது என ஐஐடி சென்னை எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஏஐயின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள ஒட்டுமொத்தத் தொழிலையும் கணக்கில் கொள்ளக்கூடாது. ஒரு வேலையில் அடங்கியுள்ள ஒவ்வொரு தனித்தனிப் பணிகளையும் ஆராய வேண்டும் என அவர்களது புதிய வெள்ளை அறிக்கை வலியுறுத்துகிறது. இப்புதிய அணுகுமுறை தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மிக அவசியமான ஒன்றாகும்.

ஏஐ ஆளுமை மாநாடு

ஏஐ ஆளுமை மாநாடு 2026-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை

ஐஐடி சென்னையின் தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளியின் கீழ் 'பொறுப்பான ஏஐ மையம்' (CeRAI) இயங்கி வருகிறது.

இந்த மையம் தயாரித்துள்ள வெள்ளை அறிக்கை ஏஐ ஆளுமை மாநாடு 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டது.

மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து பணியாற்றும் போது ஏற்படும் மாற்றங்களை இந்த அறிக்கை விரிவாக ஆராய்கிறது.

ஒரு வேலையின் சில குறிப்பிட்ட பகுதிகளை ஏஐ கையாளும். எஞ்சிய முக்கியப் பணிகளை மனிதர்களே தொடர்ந்து செய்வார்கள் என ஆய்வாளர்கள் அதில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மனிதர்களின் வேலைகள்

இயந்திரங்களால் மனிதர்களின் வேலை முழுமையாகப் பறிபோகாது

ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய ஏஐக்குத் திறன் உள்ளது என்பதால் மட்டுமே மனிதர் மாற்றப்பட மாட்டார்.

இத்தகவலை CeRAI அமைப்பின் தலைவர் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

கால் சென்டர் மற்றும் நிதித் துறைகளில் சாதாரணப் பணிகளை ஏஐ கையாளும்.

அதேவேளையில் சிக்கலான முடிவெடுக்கும் பணிகளை மனிதர்களே மேற்கொள்வார்கள்.

தொழில்நுட்பத்தின் செலவு மற்றும் அரசாங்க விதிமுறைகளே இதன் எதிர்காலத் தன்மையைத் தீர்மானிக்கும்.

இதனால் ஒட்டுமொத்த வேலை இழப்பு உடனடியாக ஏற்படாது.

ADVERTISEMENT

திறன் மேம்பாடு

சிறு நிறுவனங்களுக்கான ஏஐ கருவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பரிந்துரைகள்

சிறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் குறைந்த செலவிலான ஏஐ கருவிகளை உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை ஐஐடி சென்னை ஆய்வாளர்கள் தங்களின் அறிக்கையில் முன்வைத்துள்ளனர்.

மேலும் ஏஐ அறிமுகத்தால் பாதிக்கப்படக்கூடிய திறன்கள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டல்கள் தேவை.

ஏஐ தொழில்நுட்பத்தின் திறனை விட கொள்கை வகுப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளே எதிர்கால வேலைவாய்ப்பை நிர்ணயிக்கும்.

ADVERTISEMENT