Loading...
ஆப்பிளின் 'NameDrop' அம்சத்திற்கு எதிராக ₹1,500 கோடி நஷ்டஈடு கோரி ஐஐடி முன்னாள் மாணவர் வழக்கு
ஆப்பிளின் 'NameDrop' அம்சத்திற்கு எதிராக ₹1,500 கோடி நஷ்டஈடு கோரி ஐஐடி முன்னாள் மாணவர் வழக்கு

ஆப்பிளின் 'NameDrop' அம்சத்திற்கு எதிராக ₹1,500 கோடி நஷ்டஈடு கோரி ஐஐடி முன்னாள் மாணவர் வழக்கு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2026
10:37 am

செய்தி முன்னோட்டம்

ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர் கௌரவ் கோயல் நிறுவிய ஜிஜி டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆப்பிளின் நேம்டிராப் (NameDrop) அம்சம் தங்களது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை மீறுவதாகக் கூறி அந்நிறுவனம் சுமார் 1,500 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளது. மேலும் வழக்கு முடியும் வரை இந்தியாவில் நேம்டிராப் அம்சத்தை முடக்கவும் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்களின் விற்பனைக்குத் தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை விவரங்கள்

StayTouch செயலி மற்றும் இந்திய காப்புரிமை விவரங்கள்

இரண்டு போன்களை அருகருகே கொண்டு வருவதன் மூலம் தொடர்பு விவரங்களை பகிரும் StayTouch செயலியை ஜிஜி டெக்னாலஜிஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது.

இத்தொழில்நுட்பத்திற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் விண்ணப்பித்த அந்நிறுவனத்திற்கு 2024 ஜூலை மாதம் அதிகாரப்பூர்வ காப்புரிமை வழங்கப்பட்டது.

ஆனால் 2023 ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 17 மூலம் நேம்டிராப் வசதியை அறிமுகப்படுத்தியதால் தங்களது செயலியின் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணை நிலவரம்

அமெரிக்க வர்த்தக ஆணைய விசாரணை

தங்களது தொழில்நுட்பத்திற்கும் நேம்டிராப் அம்சத்திற்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக இரண்டு நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளை ஜிஜி டெக்னாலஜிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 2026-ல் அமெரிக்காவிலும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் ஆகஸ்ட் மாதம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்னும் முதல் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.

ADVERTISEMENT