
IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!
செய்தி முன்னோட்டம்
IBM நிறுவனம் செலவுகளை குறைக்கும் விதமாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
உலகில் பல நிறுவனங்கள் தொழில்நுட்ப மந்த நிலை காரணமாக பணிநீக்கத்தை தொடர்ந்து வருகின்றன.
சில நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலையை எளிமையாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், IBM நிறுவனம் இனி வரும் நாட்களில் AI-யை பயன்படுத்தி, பணிக்கு புதிதாக சேர்க்கப்படும் ஊழியர்களின் Hiring பணியை நிறுத்த எதிர்பார்ப்பதாக IBM CEO அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அடுத்த 5 வருடத்தில் 30 சதவீத ஊழியர்களை IBM நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய தொழில்நுட்பத்தின் உதவிகளில், சுமார் 7800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, இந்த இடத்தை நிரப்பாமல் விட முடியும் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🤖JUST IN: IBM PLANNING TO REPLACE ROUGHLY 7800 JOBS WITH AI pic.twitter.com/t5ZD3SyBCp
— Blockchain Daily (@blckchaindaily) May 2, 2023