
செகண்ட்-ஹேண்ட் ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா? சட்ட சிக்கலில் மாட்டிக்காம இருக்க இதை தெரிஞ்சிக்கோங்க
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் செகண்ட்-ஹேண்ட் ஸ்மார்ட்போன்களின் பிரபலம் அதிகரித்து வருவதால், அதிகமான பயனர்கள் மலிவு விலையில் புதுப்பிக்கப்பட்ட அல்லது மறுவிற்பனை செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை, நோக்கித் திரும்பி வருகின்றனர். குறிப்பாக பிரீமியம் பிராண்டு மொபைல் போன்களை வாங்குவதில் இந்த போக்கு மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தை வழங்கினாலும், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ தன்மை குறித்த கவலைகள் உள்ளன. திருடப்பட்ட தொலைபேசியை வாங்குவது குறிப்பிடத்தக்க நிதி இழப்புக்கும் சட்ட சிக்கலுக்கும் வழிவகுக்கும். இதனால் வாங்குவதற்கு முன் ஒரு மொபைல் திருடப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
இந்திய அரசு
இந்திய அரசு வழங்கியுள்ள அம்சம்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் உண்மையான புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன, அவை பெரும்பாலும் டெமோ யூனிட்கள் அல்லது தள்ளுபடி விலையில் விற்கப்படும் பயன்படுத்தப்படாத பொருட்களாகும். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான வாங்குபவர்கள் ஆஃப்லைன் சந்தைகளில் இருந்து வாங்க விரும்புகிறார்கள், அங்கு அறியாமல் திருடப்பட்ட மொபைலை வாங்கும் ஆபத்து அதிகமாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய, இந்திய அரசாங்கம் அதன் IMEI எண்ணைப் பயன்படுத்தி ஒரு மொபைலின் நிலையை சரிபார்க்க ஒரு எளிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாங்குபவர்கள், சாதனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளதா அல்லது திருடப்பட்டதா என்பதை எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம். எப்படி என்பது இங்கே:
வழிமுறை
சரிபார்ப்பதற்கான வழிமுறை
முதலில் மொபைல் போனில் *#06# ஐ டயல் செய்வதன் மூலம் IMEI எண்ணைக் கண்டறியவும். அடுத்து 'KYM ' என்ற வடிவத்தில் 14422 என்ற எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். தொலைபேசி உண்மையானதா அல்லது பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் பதிலைப் பெறுவீர்கள். சாதனம் பிளாக் லிஸ்டில் உள்ளதாகக் குறிக்கப்பட்டால், அது மொபைல் திருடப்பட்டதைக் குறிக்கிறது. சட்ட சிக்கல்களைத் தடுக்க இதுபோன்ற வாங்குதல்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த எளிய வழிமுறை பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான பயன்படுத்தப்பட்ட மொபைல்களை வாங்குவதை உறுதிப்படுத்த உதவும்.