LOADING...
வைஃபை வேகம் நத்தை போல உள்ளதா? ராக்கெட் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த இந்த டிப்ஸ் போதும்
வீட்டில் வைஃபை வேகம் குறைவாக இருப்பதற்கான காரணங்களும் எளிதான தீர்வுகளும்

வைஃபை வேகம் நத்தை போல உள்ளதா? ராக்கெட் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த இந்த டிப்ஸ் போதும்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 08, 2026
01:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வீடுகளில் வைஃபை வேகம் குறைவது அல்லது அடிக்கடி துண்டிக்கப்படுவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இதற்குப் பின்னால் உள்ள பொதுவான காரணங்களையும், அவற்றைச் சரிசெய்யும் எளிய வழிமுறைகளையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். இது குறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான காரணங்கள்

மெதுவான வைஃபைக்கான பொதுவான காரணங்கள்

உங்கள் இன்டர்நெட் வேகம் குறைவதற்கு வன்பொருள் முதல் சுற்றுச்சூழல் வரை பல காரணங்கள் இருக்கலாம். வைஃபை ரூட்டரை வீட்டின் ஒரு மூலைக்கோ அல்லது அலமாரியின் உள்ளேயோ வைப்பது சிக்னல் வலிமையைக் குறைக்கும். சுவர்கள் மற்றும் தளவாடங்கள் சிக்னலைத் தடுக்கலாம். மைக்ரோவேவ் ஓவன்கள், கார்ட்லெஸ் போன்கள் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர்கள் வைஃபை சிக்னலுடன் (குறிப்பாக 2.4GHz அலைவரிசையில்) மோதி இடையூறை ஏற்படுத்தலாம். ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இணைக்கப்பட்டிருந்தால், அலைவரிசை பகிர்ந்து கொள்ளப்படுவதால் வேகம் குறையும். ரூட்டரின் ஃபார்ம்வேர் (Firmware) புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அதன் செயல்பாடு மந்தமாகலாம்.

எளிய தீர்வுகள்

விலையுயர்ந்த புதிய ரூட்டர்களை வாங்குவதற்கு முன், முயற்சிக்க வேண்டிய எளிய தீர்வுகள்

ரூட்டரை வீட்டின் மையப்பகுதியிலும், தரையில் இருந்து சற்று உயரமான இடத்திலும் (உதாரணமாக மேஜை அல்லது ஸ்டாண்ட்) வைக்கவும். இது சிக்னல் சமமாகப் பரவ உதவும். உங்கள் ரூட்டரில் இரண்டு ஆண்டெனாக்கள் இருந்தால், ஒன்றை செங்குத்தாகவும் மற்றொன்றைக் கிடைமட்டமாகவும் வைக்கவும். உங்கள் ரூட்டர் 'டூயல் பேண்ட்' (Dual-band) வசதி கொண்டதாக இருந்தால், 2.4GHz-க்கு பதிலாக 5GHz அலைவரிசையைப் பயன்படுத்தவும். இது அதிக வேகத்தையும் குறைந்த இடையூறையும் வழங்கும். பயன்பாட்டில் இல்லாத சாதனங்களின் வைஃபையை அணைத்து வைப்பது மற்ற சாதனங்களுக்கு அதிக வேகத்தைக் கொடுக்கும்.

Advertisement

தொழில்நுட்ப மேம்பாடுகள்

மேற்கூறிய மாற்றங்கள் பலன் அளிக்கவில்லை எனில், செய்ய வேண்டியவை

வீடு பெரியதாக இருந்தால், 'வைஃபை ரேஞ்ச் எக்ஸ்டெண்டர்' அல்லது 'மெஷ் வைஃபை' (Mesh Wi-Fi) அமைப்பைப் பயன்படுத்துவது சிக்னல் கிடைக்காத இடங்களிலும் இணையத்தை வழங்கும். கேமிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற அதிக வேகம் தேவைப்படும் வேலைகளுக்கு, வைஃபைக்குப் பதில் லேன் கேபிள் மூலம் நேரடியாக இணைப்பது சிறந்தது. கூகுள் டிஎன்எஸ் (8.8.8.8) போன்ற பொதுவான டிஎன்எஸ் முகவரிகளைப் பயன்படுத்துவது இன்டர்நெட் தேடும் வேகத்தை சற்று அதிகரிக்க உதவும்.

Advertisement