NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு
    விருந்தினர் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தியது

    கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 15, 2024
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜூலை 12 அன்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரமாண்ட திருமணம், பிரம்மாண்டத்தையும், பகட்டையும் மட்டும் காட்டவில்லை, விருந்தினர் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டையும் வெளிப்படுத்தியது.

    பங்கேற்பாளர்களுக்கு சுமுகமான அணுகலை உறுதி செய்வதற்காக அம்பானி குடும்பம் QR குறியீடுகள் மற்றும் Google படிவங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியது.

    விருந்தினர்கள் தங்கள் வருகையை Google படிவம் அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், பாரம்பரிய RSVP முறைகளில் இருந்து இது விலகுவதைக் குறித்தது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    QR குறியீடுகள் மற்றும் கலர் பேண்ட்ஸ் : நுழைவை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

    விருந்தினர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியபோது, ​​அவர்கள் ஒரு மொபைலில் ஒரு மெசேஜை பெற்றனர்: "உங்கள் RSVPயைப் பெற்றுள்ளோம். உங்களை வரவேற்பதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்...நிகழ்வுக்கு 6 மணிநேரத்திற்கு முன் QR குறியீடுகள் பகிரப்படும்." என PTI செய்தி வெளியிட்டுள்ளது.

    நிகழ்வுக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்பு பகிரப்பட்ட QR குறியீடுகள் விருந்தினர்களின் தனிப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்பட்டன.

    விழா மையத்தில், இந்த குறியீடுகள் நிகழ்நேர கண்காணிப்பிற்காக என்ட்ரி பாயிண்டுகளில் ஸ்கேன் செய்யப்பட்டன.

    பங்கேற்பாளர்களுக்கு குறிப்பிட்ட அக்சஸ் நிலைகள் அல்லது சோன்களுக்கு ஏற்ப வண்ண-குறியிடப்பட்ட காகித பேண்டுகளும் வழங்கப்பட்டன.

    பிரபலங்களின் வருகை

    ஆனந்த்- ராதிகா திருமணத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த விருந்தினர் பட்டியல்

    உலகப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்வாக இந்தத் திருமணம் நடைபெற்றது.

    ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் , நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி , ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்ய குமார் யாதவ் போன்றோரும் இந்த உயர்மட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆனந்த் அம்பானி
    திருமணம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆனந்த் அம்பானி

    அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம் முகேஷ் அம்பானி
    பராம்பரிய குஜராத்தி முறைப்படி துவங்கிய ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டம் முகேஷ் அம்பானி
    ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர் மும்பை
    சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள் முகேஷ் அம்பானி

    திருமணம்

    மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் நடிகைகள்
    ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு தீபிகா படுகோன்
    தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா நடிகைகள்
    பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்! பிக் பாஸ் தமிழ்

    தொழில்நுட்பம்

    இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள் கூகுள்
    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்? ஓபன்ஏஐ
    வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர் உபர்
    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பிரதமர் மோடி

    தொழில்நுட்பம்

    இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள் தொழில்நுட்பம்
    கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி? கூகுள்
    மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025