Page Loader
ஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு 
பத்தொன்பது இணையதளங்கள், 10 ஆப்ஸ் மற்றும் இந்த தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன

ஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2024
01:58 pm

செய்தி முன்னோட்டம்

'கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன்' என்ற போர்வையில் ஆபாச காட்சிகள் நிறைந்த படங்களை அதிகளவில் பதிவேற்றுவதற்காக, குறிப்பிட்ட ஓடிடி தளங்களை தடை செய்துள்ளது மத்திய அரசு. பல எச்சரிக்கைகள் தரப்பட்ட போதிலும், ஆபாசமான படங்களின் உள்ளடக்கத்திற்காக 18 OTT தளங்களை மத்திய அரசு வியாழக்கிழமை முடக்கியது. பத்தொன்பது இணையதளங்கள், 10 ஆப்ஸ்(கூகுள் பிளே ஸ்டோரில் 7, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 3) மற்றும் இந்த தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆபாசம், அநாகரிகம் மற்றும் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டபோதிலும், அதன் செயல்பாடு தொடர்ந்ததால், தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தடை

தடை விதிக்கப்பட்ட இயங்குதளங்கள்

மத்திய அரசு, Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, மற்றும் பிரைம் ப்ளே போன்ற OTT இயங்குதளங்களுக்கு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், இந்த தளங்களில் உள்ள உள்ளடக்கத்தின் பெரும்பகுதி பெண்களை இழிவான முறையில் சித்தரிப்பதாக கூறியது. "ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுகள், விபச்சார குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு பொருத்தமற்ற சூழல்களில் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்களை இது சித்தரிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.