Page Loader
'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தீர்வுக்கான விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன

'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 02, 2024
09:50 am

செய்தி முன்னோட்டம்

2020இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ஃபெடரல் வயர்டேப்பிங் மற்றும் கலிபோர்னியா தனியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக கூகுள் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனருக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, ஜூன் 1, 2016 முதல் Incognito பயன்முறையைப் பயன்படுத்திய மில்லியன் கணக்கான Google பயனர்களை உள்ளடக்கியது. Google இன் Incognito பயன்முறையில் தங்கள் ஆன்லைன் ரகசியங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பயனர்கள் நம்பிய நேரத்தில், தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக உணர்ந்ததாக தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தீர்வுக்கான விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து தற்போது அதற்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி யுவோன் கோன்சலஸ் ரோஜர்ஸ் ஒப்புதல் தேவை.

கூகிள்

பயனர் தேடல்களை கண்காணித்த கூகிள்

இந்த வழக்கு விசாரணை முதலில் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2023 டிசம்பரில் எட்டப்பட்ட பூர்வாங்க தீர்வு காரணமாக அது தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தீர்வுக்கான விதிமுறைகள் அப்போது வெளியிடப்படவில்லை. கூகுள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ள பயனர்கள், கூகுளின் பகுப்பாய்வு, குக்கீகள் மற்றும் பயன்பாடுகள், கூகுளின் குரோம் ப்ரோஸெர் 'incognito' பயன்முறையிலும் மற்றும் பிற ப்ரோஸெர்களை 'பிரைவேட்' மோட்-க்கு அமைக்கும் நபர்களை, ஆல்பாபெட் யூனிட் தவறாகக் கண்காணிக்க அனுமதிக்கின்றன" என்று புகார் தெரிவித்துள்ளாதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. "இது பயனர்களின், நண்பர்கள், விருப்பமான உணவு, பொழுதுபோக்குகள், ஷாப்பிங் பழக்கம் மற்றும் ஆன்லைனில் தேடப்படும் மிகவும் நெருக்கமான மற்றும் சங்கடமான விஷயங்களை பற்றி அறிய அனுமதித்தது," என்று அறிக்கை மேலும் கூறியது.