LOADING...
எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய அம்சம் கூகுள் பிக்சல் 10 இல் அறிமுகம்
எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது கூகுள்

எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய அம்சம் கூகுள் பிக்சல் 10 இல் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
07:11 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் தனது புதிய பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது. மேம்படுத்தப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் மட்டுமின்றி, இந்த புதிய வரிசையில் இதுவரை இல்லாத ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது செயற்கைக்கோள் இணைப்பு மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளும் திறன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் துறையில் இந்த அம்சம் கொடுக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். கூகுளின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, பிக்சல் 10 சீரிஸ் பயனர்கள் சாதாரண நெட்வொர்க் அல்லது வைஃபை இல்லாத தொலைதூரப் பகுதிகளில் கூட, செயற்கைக்கோள் இணைப்பு வழியாக வாட்ஸ்அப் மூலம் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும்.

நன்மை

அவசர காலங்களில் நெட்வொர்க் இல்லாத சமயத்தில் பயன்படும்

அவசர காலங்களில் அல்லது நெட்வொர்க் இல்லாதபோது, இந்த சேவை பயனர்களுக்கு உயிர்காக்கும் வாய்ப்பாக அமையும். செயற்கைக்கோள் வழியாக பிரதான செயலியான வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள உதவும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் வரிசை பிக்சல் 10 தான் என்று கூகுள் கூறுகிறது. இவ்வளவு காலம், செயற்கைக்கோள் ஆதரவுள்ள ஸ்மார்ட்போன்கள் எஸ்ஓஎஸ் (SOS) செய்தி அனுப்புதல் போன்ற குறிப்பிட்ட அம்சங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும், இந்த அதிநவீன வசதி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் பகுதிகளில் மட்டுமே செயல்படும். தற்போது இந்த வசதி இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.