
கூகுள் மீட்டில் ஏஐ லைவ் ஆடியோ மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
கூகுள் I/O 2025 இல், கூகுள் நிறுவனம் கூகுள் மீட்டில் ஒரு அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதன்படி, லைவ்வாக ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை ஜெமினி ஏஐ மற்றும் கூகுள் டீப் மைண்டின் ஆடியோஎல்எம் போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களை மூலம் இயக்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் பேசும் மொழியை வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பதன் மூலம் நேரடி உரையாடல்களை மாற்றுகிறது, அதே நேரத்தில் பேச்சாளரின் அசல் குரல், தொனி மற்றும் உணர்ச்சி ஆகியவற்றை அப்படியே கொடுக்கிறது.
தற்போதுள்ள லைவ் சப்டைட்டில்களைப் போலல்லாமல், இந்த கண்டுபிடிப்பு ஆடியோ-டு-ஆடியோ மொழிபெயர்ப்பை வழங்குகிறது.
இது பயனர்கள் தங்கள் எதிர்முனையில் பேசுபவரின் குரலை இயற்கையான அதே குரல் தொனியுடன் தங்கள் விருப்பமான மொழியில் டப்பிங் செய்து கேட்க அனுமதிக்கிறது.
கட்டணம்
கட்டண சேவை
இதற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு நேரடி டெமோ ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் பேச்சாளர்களிடையே தடையற்ற உரையாடலைக் காட்டியது.
ஆடியோஎல்எம்மில் பயிற்சி பெற்ற மொழிபெயர்ப்பு அமைப்பு, நேரடி மொழிபெயர்ப்பாளரைக் கொண்டிருப்பதைப் போன்ற குறைந்த தாமதம், அதிக நம்பகத்தன்மை கொண்ட டப்பிங் ஆகியவற்றை வழங்குகிறது.
தற்போது பீட்டா சேவையில், கூகுளின் AI Pro மற்றும் AI Ultra திட்டங்களின் சந்தாதாரர்களுக்கு இந்த அம்சம் கட்டண சேவையில் கிடைக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ஒரு அழைப்பில் ஒரு பங்கேற்பாளருக்கு மொழிபெயர்ப்பு சேவை இருந்தால் அனைவருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், விரைவில் இதர மொழிகளும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.