LOADING...
கூகுள் மேப்ஸில் இனி பேசலாம்: புதிய AI வசதி 'Ask Maps' பயன்படுத்துவது எப்படி? 
Google Maps செயலியில் மிகப்பெரிய மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது

கூகுள் மேப்ஸில் இனி பேசலாம்: புதிய AI வசதி 'Ask Maps' பயன்படுத்துவது எப்படி? 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2026
09:59 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவி வரும் நிலையில், உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியிலும் மிகப்பெரிய மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது. கூகுளின் மேம்பட்ட AI மாடலான 'ஜெமினி' (Gemini) மூலம் இயங்கும் 'Ask Maps' என்ற புதிய வசதி, வரைபடத்தைப் பயன்படுத்தும் முறையையே புரட்சிகரமாக மாற்றியுள்ளது. இனி பயனர்கள் வெறும் இடங்களைத் தேடுவதோடு நின்றுவிடாமல், அந்த இடங்களை பற்றிய ஆழமான கேள்விகளைக் கேட்டு உடனடி பதில்களைப் பெற முடியும். தற்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த வசதி.

விவரங்கள்

கூகுள் மேப்ஸ் 'Ask Maps' என்றால் என்ன?

'Ask Maps' என்பது கூகுள் மேப்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு உரையாடல் சார்ந்த AI (Conversational AI) தேடல் வசதியாகும். வழக்கமாக ஒரு உணவகத்தின் பெயரையோ அல்லது ஊரின் பெயரையோ தட்டச்சு செய்து தேடுவதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு நண்பரிடம் கேட்பது போல கேள்விகளைக் கேட்கலாம். உதாரணமாக, "எனது நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட அமைதியான, அதே சமயம் இசை வசதி கொண்ட ஒரு இடம் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டால், கூகுள் மேப்ஸ் தனது வசம் உள்ள கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து, உங்களுக்குச் மிகச்சரியான இடத்தைப் பரிந்துரைக்கும்.

வழிமுறை

Ask Maps வசதியை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் செயலியைத் திறந்தவுடன், Search Bar அருகே அல்லது திரையின் ஒரு பகுதியில் 'Ask Maps' அல்லது ஜெமினி சின்னம் தோன்றுவதைக் காணலாம். அதைக் கிளிக் செய்தவுடன் ஒரு Chat Box திறக்கும். அங்கே உங்களுக்குத் தேவையான தகவல்களை டைப் செய்யலாம் அல்லது Voice Command மூலமாகவும் கேட்கலாம். நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ப, அந்த இடத்தின் தரம், மற்ற பயனர்களின் விமர்சனங்கள், அங்கே கிடைக்கும் வசதிகள் மற்றும் நேரலை புகைப்படங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான அறிக்கையை இந்த AI உங்களுக்கு வழங்கும். இது சாதாரணத் தேடலை விட மிகத் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.

Advertisement

நன்மை

ஜெமினி AI மூலம் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்

இந்த 'Ask Maps' வசதி வெறும் இடங்களை காட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த இடத்தைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறது. ஒரு குறிப்பிட்ட சுற்றுலாத் தலம் அல்லது வணிக வளாகத்திற்குச் செல்வதற்கு முன்னதாக, அங்கே பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் என்ன, வாகன நிறுத்துமிட வசதி எப்படி இருக்கிறது போன்ற நுணுக்கமான தகவல்களை இது பட்டியலிடுகிறது. மேலும், உங்கள் முந்தைய தேடல்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளையும் இது வழங்குகிறது. இது பயணத் திட்டங்களை மிக எளிதாக வடிவமைக்க உதவுகிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement