Loading...
நிலநடுக்கம் வருவதற்கு முன்பே எச்சரிக்கும் கூகுள்! 200 நாடுகளுக்கு ஆண்ட்ராய்டு நிலநடுக்க அலர்ட் விரிவாக்கம்
ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை 200 நாடுகளுக்கு விரிவாக்கம்

நிலநடுக்கம் வருவதற்கு முன்பே எச்சரிக்கும் கூகுள்! 200 நாடுகளுக்கு ஆண்ட்ராய்டு நிலநடுக்க அலர்ட் விரிவாக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. முன்னதாக 98 நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த சேவை, தற்போது பனாமா, குவாத்தமாலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 15, 2026 முதல் இந்த விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

100 கோடி எச்சரிக்கைகள்

100 கோடி எச்சரிக்கைகள் மற்றும் சுந்தர் பிச்சையின் விளக்கம்

இந்த தொழில்நுட்பம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, "2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு இதுவரை 100 கோடிக்கும் அதிகமான எச்சரிக்கை செய்திகளைப் பயனர்களுக்கு அனுப்பியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு வெளியே இருந்த கோடிக்கணக்கான மக்கள் இச்சேவை மூலம் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்சரிக்கை வகைகள்

ஸ்மார்ட்போன் சென்சார்களின் விந்தை மற்றும் எச்சரிக்கை வகைகள்

ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆக்ஸிலரோமீட்டர் சென்சார்களை பயன்படுத்தி, நிலநடுக்கத்தின் முதற்கட்ட அதிர்வுகளை போன்கள் கண்டறிகின்றன.

ஒரே பகுதியில் உள்ள பல போன்கள் ஒரே நேரத்தில் அதிர்வுகளை உணர்ந்து கூகுள் சர்வருக்குத் தகவல் அனுப்பும்போது, நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டு சில வினாடிகளுக்கு முன்பே எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.

இதில் Be Aware (லேசான அதிர்வு), Be Ready (தயார்நிலை), மற்றும் Take Action (முழுத்திரை அவசர எச்சரிக்கை) என மூன்று வகையான எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

புதிய அம்சம்

புதிய Be Ready அம்சம் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள்

இந்த விரிவாக்கத்துடன் Be Ready எச்சரிக்கை அமைப்பில் பல்வேறு புதிய பாதுகாப்பு தகவல்களையும் கூகுள் இணைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் பயனர்கள் தங்களது போன் திரையிலேயே நிலநடுக்கத்தின் மையம், அதிர்வு பரவும் பரப்பளவைக் காட்டும் வரைபடம், நிலநடுக்கத்தின் எதிர்பார்க்கப்படும் அளவு மற்றும் நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய முழுமையான தகவல்களை நேரடியாகப் பெற முடியும்.

இந்த தொழில்நுட்பம் மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT