LOADING...
கூகுள் டீப்மைண்டின் 'Project Genie': AI மூலம் விர்ச்சுவல் உலகங்களை உருவாக்கும் புதிய வசதி
இந்த வசதி அமெரிக்காவில் உள்ள Google AI Ultra சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

கூகுள் டீப்மைண்டின் 'Project Genie': AI மூலம் விர்ச்சுவல் உலகங்களை உருவாக்கும் புதிய வசதி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2026
10:53 am

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் தனது அதிநவீன ஏஐ தொழில்நுட்பமான Genie 3 மூலம் இயங்கும் 'Project Genie' எனும் சோதனைக் கருவியை (Experimental Tool) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் ஒரு உலகத்தை (World-building) வெறும் வார்த்தைகளால் விவரிப்பதன் மூலம் உருவாக்க முடியும். தற்போது இந்த வசதி அமெரிக்காவில் உள்ள Google AI Ultra சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த பயனருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்

புராஜெக்ட் ஜீனியின் முக்கிய சிறப்பம்சங்கள்

1. விளையாடக்கூடிய உலகம்: இது வெறும் வீடியோவை மட்டும் உருவாக்காமல், அந்த உலகிற்குள் நீங்கள் ஒரு கதாபாத்திரமாகச் சென்று உலாவவும், பொருள்களுடன் உரையாடவும் (Interaction) வழிவகை செய்கிறது. 2. தத்ரூபமான சூழல்: காடுகள், பாலைவனங்கள் அல்லது நீங்கள் கற்பனை செய்யும் விசித்திரமான இடங்களை இது 720p தரத்தில், வினாடிக்கு 24 பிரேம்கள் (FPS) வேகத்தில் உருவாக்குகிறது. 3. உடனடி மாற்றங்கள்: ஒரு உலகத்தை உருவாக்கிய பிறகு, அதில் மழை பெய்ய வேண்டும் அல்லது பனி பொழிய வேண்டும் என நீங்கள் கட்டளையிட்டால், அந்த உலகம் நிகழ்நேரத்தில் (Real-time) மாறும்.

Prompt

ப்ராம்ப்ட்களை சிறப்பாக எழுத சில குறிப்புகள்

கதாபாத்திரத்தை குறிப்பிடுங்கள்: உங்கள் உலகத்தில் யார் உலவ வேண்டும் (மனிதன், விலங்கு அல்லது ரோபோ) என்பதைத் தெளிவாகக் கூறவும். இயக்கத்தைக் குறிப்பிடுங்கள்: கதாபாத்திரம் ஓட வேண்டுமா, குதிக்க வேண்டுமா அல்லது பறக்க வேண்டுமா என்பதைச் சொல்லுங்கள். சூழலை விவரியுங்கள்: பகல் நேரமா, இரவு நேரமா அல்லது மழை பெய்யும் காலநிலையா என்பதைக் குறிப்பிடுவது தத்ரூபமான உலகத்தை உருவாக்கும்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

விபரங்கள்

கட்டண விபரங்கள் மற்றும் எதிர்கால பயன்கள்

கூகுள் ஏஐ அல்ட்ரா திட்டத்தின் சந்தா மாதத்திற்கு $249.99 (இந்திய மதிப்பில் சுமார் ₹20,800) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 டிபி (30 TB) வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் கூகுளின் பிற உயர்நிலை ஏஐ கருவிகளும் அடங்கும். இந்தத் தொழில்நுட்பம் வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாமல், வீடியோ கேம் தயாரிப்பாளர்கள், கல்வித் துறை மற்றும் தானியங்கி வாகனங்களைச் சோதிக்கும் Virtual Reality சூழல்களை உருவாக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என கூகுள் டீப்மைண்ட் தெரிவித்துள்ளது.

Advertisement