$125 பில்லியன் ஓய்வூதிய நிதிக் கணக்கை தற்செயலாக அழித்தது கூகுள் க்ளவுட்
கூகுள் கிளவுட் பிரிவு கவனக்குறைவாக $125 பில்லியன் ஓய்வூதிய நிதியைக் கொண்ட கணக்கை தெரியாமல் நீக்கிவிட்டது. முன்னணி நிதி நிறுவனமான யூனிசூப்பர் சம்பந்தப்பட்ட இந்த பிழை, 620,000 பேரை பாதித்தது. இதனால், யூனிசூப்பர் நிறுவனத்தின் ஓய்வூதிய சேமிப்புக்கு திடீரென ஆபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம், கூகுளின் கிளவுட் உடனான யூனிசூப்பர் நிறுவனத்தின தனியார் கிளவுட் கூட்டாண்மையை கடுமையாகப் பாதித்ததுடன், யூனிசூப்பர் நிறுவனத்தில் சேமிப்பு வைத்திருக்கும் உறுப்பினர்களை கவலைக்குள்ளாக்கியது. அந்த கணக்கு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேவைகள் செயலிழந்ததால் யூனிசூப்பர் உறுப்பினர்கள் தங்கள் பணத்தின் நிலை தெரியாமல் இருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யூனிசூப்பர் தங்களது கிளவுட் சந்தாவை ரத்து செய்தது
செயல்பாடுகள் மீண்டும் தொடங்கிய போது, காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறானவையாக இருந்தது. முந்தைய வாரத்தின் தரவு அதில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. யூனிசூப்பர் மற்றும் கூகுள் க்ளவுட் ஆகிய இரண்டும் இந்தப் பிழையில் தங்கள் பங்கை ஒப்புக்கொண்டன. யூனிசூப்பர் நிறுவனத்தின் கணக்கில் ஏற்பட்ட இந்த பெரிய தவறினால், யூனிசூப்பர் தங்களது கிளவுட் சந்தாவை ரத்து செய்தது. இந்த சம்பவம் யூனிசூப்பர் உறுப்பினர்கள் மற்றும் பிற கூகுள் க்ளவுட் பயனர்களிடையே தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.