
சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாகவே உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.
அந்த நாட்களில் தங்கம் வாங்க மக்கள் அலைகடலென திரண்டு வருவதும் உண்டு.
அதே போல், இந்த தடவை மாநில பட்ஜெட்டிற்கு பிறகும் மளமளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது.
அந்த வகையில் கடந்த வாரத்தில் ஏற்றமாக சென்ற தங்கம் விலை இன்று மார்ச் 27 ஆம் தேதியில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ. 5,540-க்கு விற்பனையாகிறது.
அதுவே, சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.44,320க்கு விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்
வெள்ளி விலை
வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் 30 காசுகள் உயர்ந்து 76 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி விலை 76,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.
அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.
தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.
இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.
அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.