LOADING...
கூகுளின் அதிரடி அப்டேட்: பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை
ஜிமெயிலில் பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை

கூகுளின் அதிரடி அப்டேட்: பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 26, 2025
01:59 pm

செய்தி முன்னோட்டம்

ஜிமெயில் பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கூகுள் நிறுவனம் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதுவரை ஒருமுறை உருவாக்கிய ஜிமெயில் முகவரியை (Email Address) மாற்ற முடியாது என்ற நிலை இருந்தது. ஒருவேளை முகவரியை மாற்ற விரும்பினால், பழைய தரவுகளை இழந்துவிட்டுப் புதிய கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இனி பயனர்கள் தங்களது ஜிமெயில் முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்துகிறது.

தரவுகள்

தரவுகள் அழியாமல் இமெயில் முகவரி மாற்றம்

இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்களது @gmail.com என்ற முகவரியை மாற்றினாலும், அவர்களின் கூகுள் அக்கவுண்டில் உள்ள டிரைவ் (Drive), போட்டோஸ் (Photos), யூடியூப் (YouTube) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) போன்ற அனைத்துச் சேவைகளும், தரவுகளும் அப்படியே இருக்கும். பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களும் தானாகவே புதிய முகவரிக்கு வந்து சேரும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் தங்களது பழைய மற்றும் புதிய முகவரிகள் இரண்டையும் பயன்படுத்தி லாக்-இன் (Sign-in) செய்ய முடியும். பழைய முகவரி கணக்கின் பாதுகாப்பு (Recovery Email) முகவரியாகத் தொடர்ந்து செயல்படும்.

நிபந்தனை

நிபந்தனைகளும் தகுதிகளும்

இந்த வசதி தனிப்பட்ட ஜிமெயில் கணக்குகளுக்கு (@gmail.com) மட்டுமே பொருந்தும். அலுவலகம், பள்ளி அல்லது தனிப்பயன் டொமைன் (Custom Domain) கணக்குகளுக்கு இது பொருந்தாது. தவறான பயன்பாட்டைத் தவிர்க்க கூகுள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒருமுறை இமெயில் முகவரியை மாற்றினால், அடுத்த 12 மாதங்களுக்கு மீண்டும் மாற்ற முடியாது. ஒரு கூகுள் கணக்கின் வாழ்நாளில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே முகவரியை மாற்ற முடியும் (மொத்தம் 4 முகவரிகள்). பயனர்கள் தங்களது கூகுள் அக்கவுண்ட் செட்டிங்ஸில் 'Personal Info' > 'Email' பகுதிக்குச் சென்று இந்த வசதி தங்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். கூகுள் இந்த வசதியைப் படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

Advertisement