Page Loader
அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி!
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மோசடி செய்த நபர்

அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி!

எழுதியவர் Siranjeevi
Feb 28, 2023
05:06 pm

செய்தி முன்னோட்டம்

ட்விட்டர் பயனர் ஒருவர் AI-யை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகளவில் AI-ஆன செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. AI பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். ஒரு பக்கம் AI செயல்பாடுகள் பலன் அளித்தாலும் மறுபக்கம் அது ஆபத்துகளிலும் முடிகிறது. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி போலியான சுயவிவரங்களால் மக்கள் ஏமாற்றப்படுவது பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த தொழில்முனைவோரான ரோஷன் படேல், AI ஐப் பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனரின் யதார்த்தமான படங்களை உருவாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து சுயவிவரத்தை உருவாக்கிய 24 மணி நேரத்திற்குள், ஒரு முதலீட்டாளரிடம் (VC) நிதியுதவி கேட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு

AI - தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்த நபர் - எப்படி?

இதுகுறித்து படேல் தெரிவிக்கையில், "நான் ஒரு நிறுவனரின் போலியான LinkedIn சுயவிவரத்தை உருவாக்கினேன். AI-உருவாக்கிய வெள்ளை ஆண் முகம், ஸ்ட்ரைப் படிகாரம், ஸ்டான்ஃபோர்ட் டிராப்அவுட், YC வழியாக செல்கிறது, "பாலிமத்" 24 மணி நேரத்திற்குள், முதலீடு செய்ய எனக்கு ஒரு VC கிடைத்தது," ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், போலி லிங்க்ட்இன் சுயவிவரத்தின் ஸ்கிரீன் ஷாட்களையும் VC யிடமிருந்து பெற்ற செய்தியையும் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. தற்போது பயனர்கள் இது தொடர்பான தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.