NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!
    தொழில்நுட்பம்

    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 14, 2023 | 06:27 pm 1 நிமிட வாசிப்பு
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலத்தை ஏவிய ஐரோப்பா

    பல தடைகளுக்குப் பிறகு வியாழன் (Jupiter) கோளின் நிலவுகளான யூரோப்பா, காலிஸ்டோ மற்றும் கானிமீடு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக JUICE (Jupiter Icy Moon Explorer) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். ஏரியன் 5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் இந்த விண்கலம், பூமி, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களின் காந்தப்புலங்களின் உதவியுடன் பயணித்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 2031-ல் தான் வியாழனை சென்றடையுமாம். இந்த விண்கலத்தில், அந்த நிலவுகளை ஆய்வதற்காக 10 விதமான அறிவியல் சோதனைக் கருவிகளை பொருத்தி விண்ணில் செலுத்தியிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம். அமெரிக்க மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு மையங்களும் சில சோதனைக் கருவிகளைப் பொருத்துவதில் பங்கெடுத்திருக்கின்றன.

    இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

    வியாழனில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா அல்லது இதற்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது. மேற்கூறிய வியாழனின் மூன்று நிலவுகளின் பணிபடர்ந்த வெளிப்புறத்தைக் கடந்து உள்ளே நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வது. வியாழன் மற்றும் அதன் நிலவுகளுக்கு இடையேயான சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது தான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம். யூரோப்பாவை 2 முறை கடந்து சென்றும், காலிஸ்டோவை 21 முறை கடந்து சென்றும் ஆய்வு செய்யவிருக்கும் இந்த விண்கலம், இறுதியாக 2035 செப்டம்பரில் கானிமீடில் தரையிறங்குவதுடன் இந்தத் திட்டம் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    விண்வெளி

    உலகம்

    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை  சீனா
    'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்  இந்தியா

    விண்வெளி

    600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா! நாசா
    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! நாசா
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023