Page Loader
விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக எலான் மஸ்க் பதிவு
விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக எலான் மஸ்க் பதிவு

விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக எலான் மஸ்க் பதிவு

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 23, 2023
01:21 pm

செய்தி முன்னோட்டம்

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவுகளாக இட்டு வருபவர் எலான் மஸ்க். தற்போது உலகில் பல கோடி இணையதள பயனாளர்களால் பயன்படுத்தப்படும் விக்கிபீடியா குறித்த பதிவொன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அவர். விக்கிபீடியா தளமானது பயனாளர்களுக்கு தேவையான தகவல்களை பயனாளர்களே பதிவிட்டு, பயனாளர்களே பயன்படுத்தும் வகையிலான ஒரு இலவச தகவல் தளமாகவே விளங்கி வருகிறது. ஆனால், சமீப காலங்களில் அத்தளமானது தங்களுடைய பயனாளர்களிடம் நன்கொடை கேட்டு வருகிறது. சமீபத்தில் விக்கிபீடியா பக்கத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், குறைந்தபட்சம் ரூ.25 முதல் நன்கொடை கேட்கும் பக்கத்தை நீங்கள் விக்கிபீடியாவில் பார்த்திருக்கலாம். தற்போது அது குறித்தே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் அவர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் கருத்து: 

தன்னுடைய எக்ஸ் பதிவில், "நீங்கள் எப்போதாவது ஏன் விக்கிமீடியா பவுண்டேஷனுக்கு பணம் தேவைப்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? கண்டிப்பாக விக்கிபீடியாவின் செயல்பாடுகளுக்காக அது இல்லை. அப்படியென்றால் வேறு எதற்காக அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது?" என விக்கிபீடியா தளம் நன்கொடை கேட்பதைக் குறித்து பதிவிட்டிருக்கிறார் அவர். மேலும், தன்னுடைய அடுத்த பதிவில் விக்கிபீடியா தளமானது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டால், தான் ஒரு பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகக் பதிவிட்டு, என்ன பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க். அத்துடன் அந்தப் பெயரையே ஒரு வருடத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் பயனாளர் ஒருவரின் கருத்துக்கு மறுமொழி அளித்திருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு: