NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எலான் மஸ்க்கின் மற்றுமொரு புதுமை திட்டம்: STEM மையப்படுத்தப்பட்ட ஆட் அஸ்ட்ரா பாலர் பள்ளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலான் மஸ்க்கின் மற்றுமொரு புதுமை திட்டம்: STEM மையப்படுத்தப்பட்ட ஆட் அஸ்ட்ரா பாலர் பள்ளி
    இப்பள்ளியில் ஆரம்பத்தில் மூன்று முதல் ஆறு வயதுடைய 24 குழந்தைகள் வரை சேர்க்கப்படுவார்கள்.

    எலான் மஸ்க்கின் மற்றுமொரு புதுமை திட்டம்: STEM மையப்படுத்தப்பட்ட ஆட் அஸ்ட்ரா பாலர் பள்ளி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    அட் அஸ்ட்ரா, எலான் மஸ்க் மூலம் நிதியளிக்கப்பட்ட மாண்டிசோரி பள்ளி, அதன் ஆரம்ப மாநில அனுமதியைப் பெற்றுள்ளது.

    இது டெக்சாஸின் பாஸ்ட்ராப் கவுண்டியில் செயல்பட அனுமதி பெற்றுள்ளது. டெக்சாஸ் உடல்நலம் மற்றும் மனித சேவைகள் ஆணையம், நவம்பர் 14 அன்று உரிமத்தை உறுதிப்படுத்தியது என பார்ச்சூன் தெரிவித்துள்ளது.

    ஆட் அஸ்ட்ரா என்றால் லத்தீன் மொழியில் "நட்சத்திரங்களுக்கு" என அர்த்தம். இப்பள்ளியில் ஆரம்பத்தில் மூன்று முதல் ஆறு வயதுடைய 24 குழந்தைகள் வரை சேர்க்கப்படுவார்கள்.

    சிறப்பம்சம்

    பள்ளியின் சிறப்பம்சம் அதன் STEM அடிப்படையிலான கற்றல் அம்சம்

    பள்ளி ஆய்வு அடிப்படையிலான கற்றல் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்வியில் கவனம் செலுத்தும்.

    குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் எளிய செயல்களான வண்ணம் தீட்டுவது முதல் வரைபடங்கள் மற்றும் பூகோளங்களைப் படிப்பது வரையிலானது, இவை அனைத்தும் ஆர்வத்தையும் அடிப்படைத் திறன்களையும் வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    வெளியே, குழந்தைகள் கூடைப்பந்து மைதானம் மற்றும் முச்சக்கரவண்டிகள் போன்ற வசதிகளையும் அனுபவிப்பார்கள்.

    ஆவணங்களின்படி, மாணவர்களில் பொறுப்பு, மரியாதை மற்றும் வளத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட உளவியலாளர்கள் ஆல்ஃபிரட் அட்லர் மற்றும் ருடால்ஃப் ட்ரீகர்ஸ் ஆகியோரால் ஈர்க்கப்பட்ட கொள்கைகளை பாடத்திட்டம் உள்ளடக்கியது.

    விரிவாக்கத் திட்டங்கள்

    பள்ளியின் லட்சிய விரிவாக்கத் திட்டங்கள்

    எலான் மஸ்க்கின் X அறக்கட்டளையான, மஸ்க் அறக்கட்டளை மூலம் $100 மில்லியன் நிதியளிக்கப்பட்ட ஆட் அஸ்ட்ரா பள்ளி ஒரு பரந்த கல்வி முயற்சிக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

    இதன் விரிவாக்க திட்டங்களில் K-12 பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல் மற்றும் டெக்சாஸில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    இது பள்ளி திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடக்கும்.

    இப்போதைக்கு, மஸ்கின் நிறுவன வசதிகளுக்கு அருகில் உள்ள பாஸ்ட்ராப் கவுண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பள்ளி செயல்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    எலான் மஸ்க்

    கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் எலான் மஸ்க்கை கொல்ல முயன்றதாக தகவல்  உலகம்
    இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம்  தொழில்நுட்பம்
    டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க்  அமெரிக்கா
    எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தை மாற்ற தயாராகும் எலான் மஸ்க்: அதற்கான காரணம் என்ன எக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025