
லிங்க்டுஇன் தளத்திற்குப் போட்டியாக எக்ஸின் புதிய வேலைவாய்ப்புத் தளம்
செய்தி முன்னோட்டம்
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வேலை தேடும் பயனாளர்ளால் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் லிங்க்டுஇன் (LinkedIn) தளத்திற்குப் போட்டியாக, வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையிலான புதிய வசதியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சோதனை செய்து வந்தது எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்).
நீண்ட சோதனைக்குப் பிறகு அந்த வசதியானது அனைத்துப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது இந்த வேலை தேடும் தளத்தின் வலைத்தள வெர்ஷனை மட்டுமே வெளியிட்டிருக்கிறது எக்ஸ்.
விரைவில் இதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
சிறுபதிவுகள் இடும் சமூக வலைத்தளமாக மட்டுமில்லாமல், எக்ஸை பல்வேறு சேவைகளும் இணைந்த ஒரே தளமாக மாற்ற திட்டமிட்டு வரும் எலான் மஸ்க்கின் புதிய முயற்சியே இந்த வேலைவாய்ப்புத் தளம்.
எக்ஸ்
இத்தளத்தை அணுகுவது எப்படி?
எக்ஸின் புதிய வேலைவாய்ப்புப் பக்கத்திற்குச் சென்று (எக்ஸின் புதிய வேலைவாய்ப்புப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்), நாம் எந்த விதமான வேலைகளைத் தேடுகிறோம் மற்றும் எந்த இடத்தில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறோம் என்பது குறித்த தகவல்களைப் உள்ளிட்டு நமக்கு பொருத்தமான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது தொடக்க நிலையில் இருப்பதால் லிங்க்டுஇன் தளத்தில் இருப்பது போல பல்வேறு கூடுதல் ஃபில்டிரிங் வசதிகள் எக்ஸின் புதிய தளத்தில் இல்லை.
மேலும், வேலை தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் இன்னும் இத்தளத்தினை பயன்படுத்தத் தொடங்காத நிலையில், பெரியளவில் வேலை வாய்ப்புகளும் அத்தளத்தில் பட்டியலிடப்படவில்லை.
இத்தளத்திற்கு பயனாளர்கள் எந்தளவிற்கு வரவேற்பு அளிக்கிறார்கள் என்பதனைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ி
ட்விட்டர் அஞ்சல்
புதிய வேலைவாய்ப்புத் தளத்தை அறிமுகப்படுத்திய எக்ஸ்:
Introducing our job search tool.
— Hiring (@XHiring) November 16, 2023
Start exploring jobs on web at https://t.co/0A5snlK8Ne. pic.twitter.com/4KS0016M5N