LOADING...
உங்க ஸ்டைல்ல விஷ் பண்ணுங்க! 2026 குடியரசு தினத்திற்கு வாட்ஸ்அப்பில் ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறை!
வாட்ஸ்அப்பில் குடியரசு தின ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கும் எளிய வழிமுறைகள்

உங்க ஸ்டைல்ல விஷ் பண்ணுங்க! 2026 குடியரசு தினத்திற்கு வாட்ஸ்அப்பில் ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறை!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

2026 குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழக்கமான படங்களை அனுப்புவதற்குப் பதிலாக, உங்கள் கைவண்ணத்தில் உருவான பிரத்யேக ஸ்டிக்கர்களை அனுப்பலாம். வாட்ஸ்அப்பின் ஏஐ ஸ்டிக்கர் வசதி, நீங்கள் கொடுக்கும் கட்டளைகளுக்கு (Text Prompts) ஏற்ப அழகான மற்றும் தேசபக்தி மிக்க ஸ்டிக்கர்களை நொடிகளில் உருவாக்கித் தரும். இந்த வசதியைப் பயன்படுத்த உங்கள் வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

செயல்முறை

ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறை (Step-by-Step)

வாட்ஸ்அப்பைத் திறக்கவும்: உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, யாருக்கு ஸ்டிக்கர் அனுப்ப வேண்டுமோ அவர்களின் சாட் விண்டோவிற்குச் செல்லவும். ஸ்டிக்கர் பகுதிக்குச் செல்லவும்: மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் இருக்கும் Emoji ஐகானைத் தட்டவும். பின்னர் கீழே உள்ள சதுர வடிவிலான Stickers டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். உருவாக்கத் தொடங்கவும்: அதில் உள்ள 'Create' அல்லது பிளஸ் (+) பட்டனைத் தட்டவும். சில போன்களில் இது 'AI Stickers' என்று நேரடியாகக் காட்டப்படும். கட்டளைகளை உள்ளிடவும் (Prompt): உங்களுக்குத் தேவையான ஸ்டிக்கரை விவரிக்கவும். உதாரணமாக: "Republic Day 2026 sticker with Indian flag" "Happy Republic Day 2026 text in tricolour" "India map with tricolour balloons"

ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள்

நீங்கள் கொடுத்த கட்டளைக்கு ஏற்ப வாட்ஸ்அப் சில ஸ்டிக்கர்களைக் காட்டும். அதில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அது உடனே அனுப்பப்படும். நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை 'Favorites' பகுதியில் சேமித்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஸ்டிக்கர் தவறாகவோ அல்லது அநாகரீகமாகவோ இருந்தால், அதை வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ரிப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது. உங்களுக்கு ஏஐ ஸ்டிக்கர் உருவாக்க நேரமில்லை என்றால், வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஸ்டோரிலேயே குடியரசு தினத்திற்கான பிரத்யேக ஸ்டிக்கர் பேக்குகளை (Sticker Packs) டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

Advertisement