Page Loader
சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்! 
தங்கம் விலை மே 05 இல் சவரனுக்கு 46, 200 ரூபாய் உயர்வை எட்டியுள்ளது

சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்! 

எழுதியவர் Siranjeevi
May 05, 2023
01:03 pm

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன்படி , சென்னையில் இன்றைய நாள் மே 05 ஆம் தேதிப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதுவே சவரனுக்கு 200 ரூபாய் உயர்வை எட்டி ரூ. 46, 200 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளிய விலையானது கிராமுக்கு 1.10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 83.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,700 எனவும் விற்பனையாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post