Loading...
தெரியாத நம்பர்களுக்கு இனி இடமில்லை: நவம்பர் 1 முதல் இந்தியாவில் 'CNAP' காலர் ஐடி கட்டாயம்
நவம்பர் 1 முதல் இந்தியாவில் 'CNAP' காலர் ஐடி கட்டாயம்

தெரியாத நம்பர்களுக்கு இனி இடமில்லை: நவம்பர் 1 முதல் இந்தியாவில் 'CNAP' காலர் ஐடி கட்டாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
12:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடிகளுக்கு தடைபோடும் விதமாக, தொலைத்தொடர்புத் துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மொபைல் போன்களில் அழைப்பவரின் உண்மையான பெயரைக் காட்டும் 'காலர் நேம் பிரசென்டேஷன்'(CNAP) சேவை வரவிருக்கும் நவம்பர் 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவின்படி, 4G மற்றும் 5G போன்ற அதிநவீன மொபைல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த வசதி தானாகவே செயற்படுத்தப்படும்.

விவரங்கள்

CNAP என்றால் என்ன?

உங்களுக்கு ஒரு அழைப்பு வரும்போது, திரையில் முதல் வரியாக அழைப்பாளரின் எண்களும், இரண்டாவது வரியாக உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேவ் செய்யப்பட்ட பெயரும் தோன்றும்.

ஒருவேளை எண் சேமிக்கப்படவில்லை எனில், டெலிகாம் நிறுவனத்தின் டேட்டாபேசில் உள்ள அதிகாரப்பூர்வ பெயர் திரையில் காண்பிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்குத் திரையில் 'International Call' எனத் தெளிவாக குறிப்பிடப்படும்.

வணிக மற்றும் மொத்த இணைப்புகளைப் பயன்படுத்துவோர், வர்த்தக முத்திரை அல்லது ஜிஎஸ்டி (GST) பதிவின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான பெயரைக் காண்பித்துக் கொள்ள நிறுவனங்கள் அனுமதி வழங்கும்.

தனியுரிமை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகள்

பயனர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'Security-by-design' என்ற அணுகுமுறையின் கீழ் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான தரவுத்தளத்தைப் பராமரிக்க வேண்டும்.

அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், இந்த Query-response பொறிமுறை மூலம் அழைப்பாளரின் பெயர் எங்கும் சேமிக்கப்படவோ அல்லது தக்கவைக்கப்படவோ மாட்டாது.

மேலும், 'Calling Line Identification Restriction' வசதியைப் பெற்றுள்ள பயனர்களின் பெயர்கள் ரகசியமாகவே வைக்கப்படும்; திரையில் காட்டப்படாது.

TRAI அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் கடந்த சில மாதங்களாக 4G, 5G நெட்வொர்க்குகளில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரிசோதனைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூன்றாம் தரப்பு காலர் ID செயலிகளை நம்பியிருக்கும் நிலை மாறி, அரசு தரப்பிலேயே பாதுகாப்பான அதிகாரப்பூர்வ காலர் ID வசதி பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

ADVERTISEMENT