ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது 2 மணிநேர வீடியோக்களை பதிவேற்றலாம்: எலான் மஸ்க்!
ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது இரண்டு மணிநேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவேற்றலாம். இதனை எலான் மஸ்க் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது 8 ஜிபி வீடியோக்களை பதிவேற்றலாம்!" என்று அவர் பதிவிட்டிருந்தார். ப்ளூ டிக் அல்லாத சந்தாதாரர் 140 வினாடிகள் (2 நிமிடங்கள், 20 வினாடிகள்) வரை மட்டுமே வீடியோக்களை பதிவேற்ற முடியும். ஏப்ரல் 1 அன்று, எலான் மஸ்க் ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கான சந்தாவை அறிமுகப்படுத்தினார். இது முன்பு இலவசமாக வழங்கப்பட்டது. பிற்பாடு, இது ஒரு கட்டணச் சேவையாக மாறியது, இது ப்ளூ டிக் பெறுவதற்கு மாதம் $8 & வருடத்திற்கு $84 என்ற விலையை நிர்ணயித்தது.
டிவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
இந்திய ரூபாய் நோட்டுகளின் கணக்கு படி மாதம் ட்விட்டரின் மொபைல் சேவைக்கு ₹650 மற்றும் இணையதள சேவைக்கு ₹900 ஆகவும் செலுத்தலாம். சந்தாதாரர்கள் தங்கள் ட்வீட்களை இடுகையிட்ட 30 நிமிடங்களுக்குள் ஐந்து முறை வரை திருத்தலாம், நீண்ட வீடியோக்களை இடுகையிடலாம், 50 சதவீதம் குறைவான விளம்பரங்களைப் பார்க்கலாம், மேலும் புதிய அம்சங்களை முன்கூட்டியே அணுகலாம். மே 12 அன்று, எலான் மஸ்க் லிண்டா யாக்கரினோவை - முன்னாள் என்பிசி யுனிவர்சல் விளம்பரத் தலைவர் - புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். மஸ்க், யாக்கரினோ 'வணிக நடவடிக்கைகளில்' கவனம் செலுத்துவார். "டிவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!" என்று மஸ்க் கூறினார்.