
மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்?
செய்தி முன்னோட்டம்
'முன்னொரு' காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு பப்ஜி. 2020 செப்டம்பரில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த 117 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.
அந்த 117 செயலிகளில் ஒன்றாகத் தடை செய்யப்பட்டது பப்ஜி. இந்தியாவில் அந்த கேமிற்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. எனவே, இந்தியாவிற்கென பப்ஜி போலவே புதிய BGMI (BattleGrounds Mobile India) என்ற கேமை அறிமுகப்படுத்தியது பப்ஜியை உருவாக்கிய கிராஃப்டான் நிறுவனம்.
சீனாவில் உள்ள சர்வர்களை இந்த BGMI கேம் பயன்படுத்தியது எனக் கூறி கடந்த ஜூலை மாதம் இந்த கேமையும் இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.
தற்போது இந்தியாவில் மீண்டும் BGMI கேமை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது கிராஃப்டான்.
கேமிங்
மீண்டும் வெளியிடப்படுகிறதா BGMI?
ஆம், மீண்டும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது BGMI. மீண்டும் இந்தியாவில் செயல்பட அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கிராஃப்டான் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சான் ஹ்யூனில் சோ.
எனினும், எப்போது இந்த கேமை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது என்ற தேதி அந்நிறுவனம் தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிடவில்லை. விரைவில் வெளியிடப்படும் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து ட்விட்டரிலும் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
அந்தப் பதிவில், "தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 3 மாதங்களில் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படும். சர்வர் பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This is a 3 month trial approval of #BGMI aftr it has complied wth issues of server locations n data security etc.
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) May 19, 2023
We will keep a close watch on other issues of User harm, Addiction etc in next 3 months before a final decision is taken @GoI_MeitY @PMOIndia https://t.co/9SrYekrHXz