கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா'
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது. இதன் விளைவாக, லடாக்கின் ஹான்லேயில் உள்ள டார்க் ஸ்கை ரிசர்வ் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வானை வண்ணமயமாக மாற்றும் 'அரோரா' தோன்றி மக்களை ஈர்த்தது. லடாக்கில் அரோரா பொரியாலிஸ் மற்றும் அரோரா ஆஸ்ட்ராலிஸ் ஆகியவை தோன்றியதாக கூறப்படுகிறது. சூரியனில் இருந்து வெளியாகும் சூரிய புயல்கள் பூமியை தாக்கும் போது, பூமியின் மின்காந்த புலம் அந்த புயலில் இருந்து நம்மை காக்கும். இது பூமிக்கும் சூரியனின் புயலுக்கும் இடையே ஒரு வேலியாக செயல்படுகிறது. இந்நிலையில், சூரிய புயல் பூமியின் வளிமண்டலத்துடன் தொடர்புகொள்ளும் போது சில கண்கவர் ஒளிகள் வானில் தோன்றும். அதுவே அரோரா ஆகும்.