2022 இல், வானியலாளர்கள் 200 புதிய கிரகங்களைக் கண்டுபிடுத்துள்ளனர்!
நாசா, சமீபத்தில் ட்விட்டரில் இதுவரை 5,235 வெளிக்கோள்கள் (எக்ஸோபிளானெட்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும், வானியலாளர்கள், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே, 200 க்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடுத்துள்ளனர். ஆண்டு தொடங்கும் போது, 5,000க்கும் குறைவான வெளிக்கோள்களே அடையாளம் காணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தாண்டில், இன்னும் பல அறியப்படாத உலகங்களை வெளிக்கொணர எதிர்பார்ப்பதாக, நாசா தெரிவித்துள்ளது. இதுவரை பல சாட்டிலைட்கள், இந்த ஆராய்ச்சி பணிக்கு விண்வெளிக்கு அனுப்ப பட்டுள்ளன. குறிப்பாக, 2018 இல் ஏவப்பட்ட TESS (Transiting Exoplanet Survey Satellite), பிரகாசமான குள்ள நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் உள்ள எக்ஸோபிளானெட்களை ஆய்வு செய்து வருகிறது. மேலும், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அந்த எக்ஸோபிளானெட்களின் வளிமண்டலத்தை ஆராய்கிறது.
2022 இல் 200 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
எக்சோபிளானெட் பற்றிய தகவல்
எக்ஸோப்ளானெட்டுகளில் 4%, பூமி அல்லது செவ்வாய் போன்ற பாறை கிரகங்கள். எக்ஸோப்ளானெட்டுகளின் பட்டியலில், தாய் நட்சத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் கிரகங்களை, "சூடான வியாழன்கள்" என்று குறிக்கின்றனர். பூமியை விட பெரிய பாறை கிரகங்களை, "சூப்பர் எர்த்ஸ்" எனவும், நெப்டியூனின் சிறிய பதிப்புகளுக்கு ஒத்தவைகளை, "மினி-நெப்டியூன்கள்" எனவும் கூறுகின்றனர். 2022இல், கண்டுபிடிக்கப்பட்ட நெப்டியூன் போன்ற எக்ஸோப்ளானெட், HD 109833 b என்று அழைக்கப்படுகிறது. நாசாவின் கூற்றுப்படி, அந்த எக்ஸோப்ளானெட்டின் அடர்த்தி, பூமியின் அடர்த்தியை விட, 8.69 அதிகம் என்றும், அது, அதன் தாய் நட்சத்திரத்தைச் ஒரு முறை சுற்றி வர, 9.2 நாட்கள் ஆகும் எனவும் கூறுகிறது. நாசாவின், நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் டெலஸ்கோப், புதிய எக்ஸோபிளானெட்க்ளை கண்டுபிடிக்க உதவும் என கூறப்படுகிறது.