LOADING...
இந்தியா திரும்பினார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
இந்தியா திரும்பினார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா

இந்தியா திரும்பினார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 17, 2025
08:23 am

செய்தி முன்னோட்டம்

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) முதன்முதலில் பார்வையிட்டவருமான விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, ஆக்சியம்-4 பயணத்தை முடித்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) இந்தியா திரும்பினார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். சுபன்ஷு சுக்லாவின் சாதனையை தேசிய பெருமைக்குரிய தருணம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் விவரித்தார். அவர் மேலும் இஸ்ரோவைப் பாராட்டினார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட ஆதரவை அங்கீகரித்தார்.

ககன்யாத்ரி

ககன்யாத்ரி என பாராட்டு

டாக்டர் ஜிதேந்திர சிங் சுபன்ஷு சுக்லாவை ககன்யாத்ரி என்று பாராட்டினார். மேலும் இந்தியாவின் வரவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரின் இருப்பையும் குறிப்பிட்டார். சுபன்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தனது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் ஏற்கனவே சுபன்ஷு சுக்லாவின் வருகையை குறிப்பிட்டிருந்தார். இது மனித விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் லட்சியங்களுடனும் அதன் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்குவதனுடனும் தொடர்புடையது. முன்னதாக, ஜூன் 25 ஆம் தேதி ஏவப்பட்ட டிராகன் விண்கலக் குழுவில் இடம் பெற்றிருந்த சுபன்ஷு சுக்லா விண்வெளியில் 18 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.