LOADING...
"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்
டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்

"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
02:41 pm

செய்தி முன்னோட்டம்

உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்(WEF) நடைபெற்ற விவாதத்தின் போது, சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் 'இரண்டாம் நிலையில்' இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கு அதே மேடையில் கடும் எதிர்ப்பை தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா ஏஐ துறையில் மிகத் தெளிவாக 'முதல் நிலை' (First group) நாடுகளின் வரிசையிலேயே உள்ளது என்று பதிலடி கொடுத்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வாதங்கள்

அமைச்சர் முன்வைத்த முக்கிய வாதங்கள்

ஸ்டான்போர்ட் தரவரிசை: ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஏஐ குறியீட்டின்படி, ஏஐ ஊடுருவல் மற்றும் தயார் நிலையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்திலும், ஏஐ திறமையாளர்களின் எண்ணிக்கையில் 2-வது இடத்திலும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஐந்து அடுக்கு கட்டமைப்பு: பயன்பாடு (Application), மாடல், சிப், உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் ஆகிய ஐந்து அடுக்குகளிலும் இந்தியா ஒரே நேரத்தில் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். பயன்பாட்டு துறை (Application Layer): ஏஐ சேவைகளை உலகிற்கு வழங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும், 20 முதல் 50 பில்லியன் Parameters கொண்ட நடுத்தர அளவிலான ஏஐ மாடல்களே 95% பணிகளுக்கு போதுமானது என்றும், அத்தகைய மாடல்களை இந்தியா ஏற்கனவே உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

Advertisement

முக்கியச் சந்திப்புகள்

டாவோஸில் META அதிகாரியுடன் சந்திப்பு

டாவோஸ் பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான அதிகாரி ஜோயல் கப்லானை சந்தித்து, டீப்ஃபேக் (Deepfake)** அச்சுறுத்தல்களைத் தடுப்பது குறித்து விவாதித்தார். மேலும், ஐபிஎம் (IBM) CEO அரவிந்த் கிருஷ்ணாவை சந்தித்து, இந்தியாவில் மேம்பட்ட செமிகண்டக்டர் (2nm மற்றும் 7nm சிப்) தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (DPI) மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Advertisement