இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்டோர்களை திறக்க உள்ளது. மும்பையில் Apple BKC ஸ்டோர் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஸ்டோரையும், டெல்லியில் Apple Saket ஏப்ரல் 20 ஆம் தேதி இரண்டாவது ஸ்டோரையும் திறக்க உள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது டெல்லியில் திறக்கப்பட்ட ஸ்டோருக்கு மாதம் ரூ.40 லட்சம் வாடகை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல் மும்பையில் உள்ள ஸ்டோருக்கு 42 லட்சம் வாடகை எனவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் திறக்கும் ஸ்டோர்களுக்கான மாத வாடகை எவ்வளவு?
மும்பை ஸ்டோர் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. மேலும், 20,000 சதுர அடியில் மூன்று தளங்களில் மும்பை ஸ்டோர் திறக்கப்படுகிறது. டெல்லி ஸ்டோரை பொறுத்தவரை 8,417.38 சதுர அடியில் பிரம்மாண்டமாக திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் மும்பையில் திறக்கும் ஸ்டோருக்கு அருகில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் ஸ்டோர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.