Page Loader
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை! 
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் இந்தியாவில் டெல்லியில் திறக்க உள்ளது

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை! 

எழுதியவர் Siranjeevi
Apr 11, 2023
04:24 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆப்பிள் Apple BKC என பெயர் சூட்டியிருந்தது. இந்த இடமானது, மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் ஜியோ வோர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்பிள் இரண்டாவது ஸ்டோரை இந்தியாவில் உள்ள தலைநகர் டெல்லியில், Apple Saket பகுதியில் ஏப்ரல் 20, 2023 அன்று திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் மும்பையில் திறக்கும் ஸ்டோருக்கு அருகில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் ஸ்டோர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் என தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post