Page Loader
ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்?
WWDC 2023-ல் ஆப்பிள் இயங்குதளங்கள் குறித்த அப்டேட்கள் என்னென்ன?

ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 06, 2023
07:01 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் தங்களின் மேக், ஐபேடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஆகிய சாதனங்களுக்கான புதிய இயங்குதளங்கள் மற்றும் இயங்குதளங்கள் குறித்த அப்டேட்களை வெளியிட்டது ஆப்பிள். என்னென்ன அறிவிப்புகள்? ஐபேடு OS 17: தங்களது ஐபேடுகளுக்கான புதிய இயங்குதளமான ஐபேடு OS 17-ஐ இந்த நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். லைவ் இன்டராக்ஷ்ன், ஹோம் ஸ்கிரீனை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி, புதிய ஹெல்த் மற்றும் நோட்ஸ் செயலிகள் ஆகியவற்றை இந்த புதிய ஐபேடு இயங்குதளத்தில் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.

ஆப்பிள்

WWDC 2023 நிகழ்வில் ஆப்பிளின் அறிவிப்புகள்: 

மேக் OS 14: தங்களது டெஸ்க்டாப் கணினிகளுக்கான மேக் OS 14-ஐ இந்த நிகழ்வில் வெளியிட்டது ஆப்பிள். ஆனால், அதனை மேக் OS 14 என்று அழைக்காமல், மேக் OS சோனோமா எனப் பெயரிட்டிருக்கிறது ஆப்பிள். இது கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு நகரின் பெயராம். இந்த இயங்குதளத்தில் புதிய அப்டேட்கள் பலவற்றை செய்திருக்கிறது ஆப்பிள். வாட்ச் OS 10: தங்களது ஸ்மார்ட்வாட்ச்களுக்கான புதிய இயங்குதளமான வாட்ஸ் OS 10-ஐ இந்த நிகழ்வில் வெளியிடவில்லை. ஆனால், அதனை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தி, அது குறித்த தகவல்களையும் தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது ஆப்பிள். இதுவரை அறிமுகப்படுத்தப்படாத சில அப்டேட்களை இந்த வாட்ஸ் OS-ல் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post