ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம்
ஆப்பிள் டிவி செயலி, ஏற்கனவே ஆண்ட்ராய்டு டிவி சாதனங்களில் உள்ளது, ஆனால் இன்னும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பதிப்பு வரவில்லை. அந்த குறையைப் போக்க, ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி செயலியை உருவாக்கி உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் டிவி செயலியின் மூலம், ஆப்பிளின் பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அதை பற்றிய லைப்ரரி, மற்றும் ஆப்பிள் டிவி சந்தா ஸ்ட்ரீமிங் சேவை அனைத்தையும் காணலாம். தற்போது உருவாக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிற ஆண்ட்ராய்டு செயலியில், இவை அனைத்திற்கும் அனுமதி உள்ளதா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இனி ஆண்ட்ராய்டு போனிலும் வரப்போகிறது ஆப்பிள் டிவி
ஆப்பிள் டிவி
ஆப்பிள் டிவி, iOS, tvOS மற்றும் macOS உள்ளிட்ட பல்வேறு Apple தளங்களில், தற்போது கிடைக்கிறது. மேலும் Android TV, Fire TV, webOS மற்றும் தற்போதைய தலைமுறை கேமிங் கன்சோல்கள் போன்ற இயங்குதளங்களிலும் காணலாம். ஆப்பிள், தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் முயற்சி தான் இது. ஆண்ட்ராய்டில் ஆப்பிள் டிவி வரப்போகிறது என்று தகவலை, ShrimpApplePro என்ற தொழில்நுட்ப டிப்ஸ்டர் தெரிவித்துள்ளது. "தற்போது பீட்டா சோதனை நிலையில் உள்ளது என்றும், இணக்கமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் அனைவருக்கும் விரைவில் வெளியிடப்படும்", என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் மியூசிக் பயன்பாடும் ஒரு அப்டேட்டைப் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அப்டேட், என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் இல்லை.