சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவை உற்பத்தி மையமாக தேர்வு செய்யுமா ஆப்பிள்?
பல்வேறு துறைகளின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்கலாமா என்று யோசித்து வருகிறது. அதில், ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ரீடெயில் ஸ்டோரை சில நாட்களுக்கு முன்பு மும்பையில் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் உற்பத்தி செய்யும் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பிரத்யேகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி என்பது பெரும்பான்மையாக சீனாவில் தான் உள்ளது. சீனாவில் இருந்து வெளியேற ஏற்கனவே ஆப்பிள் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் உற்பத்தி மையமாக சீனாவைத் தவிர வேறு நாடு என்பதை தேர்வு செய்யும் நோக்கில், இந்தியாவை ஆப்பிள் தேர்வு செய்யக்கூடும். இதற்கு சான்றாக, ஏற்கனவே ஐஃபோன்கள் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டது.
ஐஃபோன் 15 இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் - ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கை
சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில், ஐஃபோன் 15 மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெண்ணிலா ஐஃபோன் 15 கேசிங்க்ஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதனுடைய மொத்த யூனிட்டுமே, வெளியே அனுப்பப்படும் முன்பு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். ஆப்பிள் உற்பத்தி முழுவதுமே இந்தியாவிற்கு மாறிவிடுமா என்பது உறுதியாக கூற முடியாது. ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி தொடங்கி இருந்தாலும், வியட்நாமும் பட்டியலில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சீனாவில் இருந்து விலகிட முடியுமா என்பதும் கேள்விக்குறி! இருப்பினும், இந்தியாவில் சப்ளை-செயினை மேம்படுத்தி வருகிறது. எனவே, இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நிச்சயமாக இடம்பெறும் என்பது உறுதியாகக் கூறப்படுகிறது.