Loading...
ஆப்பிளின் முதல் போல்டபிள் போன் 'iPhone Duo' அறிமுகம்: ரூ.3 லட்சம் விலையில் என்னென்ன சிறப்பம்சங்கள்?
ஆப்பிளின் முதல் போல்டபிள் போன் 'iPhone Duo' அறிமுகம்

ஆப்பிளின் முதல் போல்டபிள் போன் 'iPhone Duo' அறிமுகம்: ரூ.3 லட்சம் விலையில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
06:16 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டூயோ-வை கியூபெர்டினோவில் நடைபெற்ற சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய CEO ஜான் டெர்னஸ் தலைமையில் அறிமுகமான முதல் முக்கிய தயாரிப்பு இதுவாகும். மற்ற பிராண்டுகளின் செங்குத்தான வடிவமைப்பிற்கு மாற்றாக, வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பரந்த அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்புறத் திரை, 7.6 இன்ச் ரெட்டினா அளவில் Under-display கேமராவுடன் வருகிறது. இந்த புதிய ஐபோனின் வெளிப்புறத் திரை 5.4 இன்ச் ஆகும். ஐபோன் டூயோவின் மடிப்புக் கோட்டை(Crease) மறைக்கவும், வெளிச்சத்தின் பிரதிபலிப்பைக் குறைக்கவும் சிறப்பு நானோ-டெக்ஸ்டர் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

விவரங்கள்

தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பாதுகாப்பு

100-க்கும் மேற்பட்ட துல்லியமான பாகங்களால் இதன் ஹிஞ்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போனில் ஃபேஸ் ஐடி வசதி இல்லை; மாற்றாக டச் ஐடி மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலம் அன்லாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிவேக A20 புரோ சிப் மற்றும் C2 மோடம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 48MP முதன்மை கேமரா +48MP அல்ட்ரா-வைட் கேமரா (2x ஆப்டிகல் ஜூம்) கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது.

இதன் சக்திவாய்ந்த பேட்டரியால், உள்புறத் திரையில் 31 மணிநேரமும், வெளிப்புறத் திரையில் 44 மணிநேரமும் வீடியோ பிளேபேக் செய்ய முடியும்.

மடிக்கக்கூடிய திரைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட iOS 27 இயங்குதளத்தில் இது இயங்குகிறது. இந்த புதிய அறிமுகத்தை 256GB ஆரம்ப விலை ₹2,99,900 ஆகும்.

ADVERTISEMENT