அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு வரும் 'iPhone Duo': கார் கதவை மூடுவது போன்ற சொகுசு ஃபீல்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான 'iPhone Duo' வரும் அக்டோபர் 23-ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவுத் துணைத் தலைவர் டாம் மரியப், இப்போனின் ஹிஞ்ச் வடிவமைப்பு மற்றும் அதன் உழைப்புத் திறன் குறித்த பல சுவாரஸ்யமான தொழில்நுட்ப ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
ஹிஞ்ச் அமைப்பு
சொகுசு காரின் கதவு போன்ற ஃபீல்
TechRadar செய்தி நிறுவனத்திற்கு டாம் மரியப் அளித்த பேட்டியில், ஐபோன் டூயோவின் ஹிஞ்ச் அமைப்பை வடிவமைக்க பல பொறியியல் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
போனை மடிக்கும்போது பயனர் உணரும் உணர்வை மேம்படுத்தப் பல மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உயர்தரச் சொகுசுக் காரின் கதவை மூடும்போது கிடைக்கும் உறுதியான உணர்வைப் போல இப்போனை மூடும்போதும் பயனர்கள் உணர்வார்கள்.
இதனால் போன் உடைந்துவிடுமோ என்ற பயமின்றிப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பு
100-க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் & IP68 பாதுகாப்பு
ஐபோன் டூயோ போனில் 7.6 இன்ச் உள்காட்சித் திரையும், 5.4 இன்ச் வெளித் திரையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்போனின் மடிப்புப் பகுதி (Hinge) மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறிய துல்லியமான உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
மடிக்கக்கூடிய போன்களிலேயே முதன்முறையாக IP68 தூசு மற்றும் நீர் எதிர்ப்புச் சான்றிதழ் பெற்றுள்ளது.
போனின் முன் மற்றும் பின் பகுதிகளில் செராமிக் ஷீல்டு பாதுகாப்பும், உட்புறத் திரையில் ஸ்கிராட்ச்-ரெசிஸ்டண்ட் பூச்சும் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம்
மடிப்பு கோடு (Crease) மற்றும் திரைத் தொழில்நுட்பம்
மடிக்கக்கூடிய போன்களில் உருவாகும் மடிப்பு கோடுகளை (Creases) குறைக்கவும், திரையை பாதுகாக்கவும் சிறப்புத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எதிரொளிப்பை குறைப்பதற்காக மேட் நானோ-டெக்ஸ்சர் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது
திரையின் மடிப்பு அழுத்தத்தை குறைக்க புத்தகப் பக்கங்கள் போல் நகரும் சிறப்பு ஒட்டுபசையும், கட்டமைப்பை வலுப்படுத்தத் டைட்டானியம் பேஸ்பிளேட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சாதாரணப் பயனர்கள் 5 ஆண்டுகள் பயன்படுத்தினால் எந்தெந்த சூழல்களை சந்திப்பார்களோ, அத்தனை கடுமையான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே இப்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.