Loading...
ஆப்பிளின் புதிய ஐஃபோன் 18 புரோ மாடல்கள் அறிமுகம்: A20 புரோ சிப்செட், கேமரா மாற்றங்கள் மற்றும் விலை விவரங்கள்
ஐஃபோன் 18 புரோ மற்றும் ஐஃபோன் 18 புரோ மேக்ஸ் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது Apple

ஆப்பிளின் புதிய ஐஃபோன் 18 புரோ மாடல்கள் அறிமுகம்: A20 புரோ சிப்செட், கேமரா மாற்றங்கள் மற்றும் விலை விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
06:06 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் தனது அதிநவீன புதிய முதன்மை ஸ்மார்ட்போன்களான ஐஃபோன் 18 புரோ மற்றும் ஐஃபோன் 18 புரோ மேக்ஸ் மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய மாடல்கள் டீப் பிளாக், சில்வர், கிளேசியர் மற்றும் பர்கண்டி ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கவுள்ளன. இப்புதிய ஐபோன் மாடல்களில் 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த A20 புரோ சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6-கோர் சிபியூ (2 டெஸ்க்டாப்-கிளாஸ் சூப்பர் கோர்கள் + 4 எஃபிசியன்சி கோர்கள்) கொண்டுள்ளதால் இதன் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 7-கோர் ஜிபியூ (GPU) மூலமாக முந்தைய மாடலை விட 40% கூடுதல் கிராபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது.

பேட்டரி

வேப்பர் சேம்பர் மற்றும் பேட்டரி லைஃப்

இதன் வெப்ப மேலாண்மைக்காக 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட 'நெக்ஸ்ட்-ஜெனரேஷன் வேப்பர் சேம்பர்' வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, iPhone 18 Pro 36 மணிநேர வீடியோ பிளேபேக் (15 நிமிட வயர்டு சார்ஜிங்கில் 6 மணிநேர வீடியோ பிளேபேக்) உடன் வருகிறது.

iPhone 18 Pro Max 45 மணிநேர வீடியோ பிளேபேக் (ஐஃபோன் வரலாற்றிலேயே மிக நீண்ட பேட்டரி லைஃப்) உடன் வருகிறது.

புதிய 48MP வேரியபிள் அபெர்ச்சர் முதன்மை கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மெல்லிய பிளேடுகள் வெளிச்சம் குறைவான இடங்களில் அதிக ஒளியை உட்செலுத்தி, தரமான இரவு நேரப் படங்களை எடுக்க உதவுகிறது.

விலை விவரங்கள்

கேமரா மற்றும் விலை விவரங்கள்

மேலும் 4K டைம்-லேப்ஸ் வீடியோ பதிவு, ஷட்டர் ஸ்பீட் மாற்றக்கூடிய புரோ கன்ட்ரோல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அலுமினியம் பாடி, சிறிய டைனமிக் ஐலேண்ட் (மூன்று லைவ் ஆக்டிவிட்டி வரை காட்டும்) போன்ற பல புதிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் 256GB அளவு கொண்டiPhone 18 Pro ₹1,64,900 விலைக்கும், iPhone 18 Pro Max ₹1,79,900 விலைக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT