NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்' 
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்' 
    தொழில்நுட்பம்

    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்' 

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 13, 2023 | 01:10 am 1 நிமிட வாசிப்பு
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்' 
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'

    புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை தற்போது நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஐபோன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒவ்வொரு வருடமும் அறிமுகப்படுத்துவதைப் போலவே இந்த ஆண்டும் நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஐபோன் 15, ஐபோன் 15 ப்ளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஐபோன்களையே வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். என்னென்ன வசதிகள் மற்றும் என்னென்ன விலையில் புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள்? பார்க்கலாம்.

    அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்டு வசதி: 

    முந்தைய ஐபோன் 14 சீரிஸில், ப்ரோ மாடல்களில் மட்டுமே டைனமிக் ஐலேண்டு வசதியை வழங்கியிருந்தது ஆப்பிள். ஆனால், இந்த முறை 15 சீரிஸின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்டு வசதியை அளித்திருக்கிறது அந்நிறுவனம். முன்னதாக வழங்கப்பட்டு வந்த ம்யூட் ஸ்விட்சுக்கு மாற்றாக ஆக்ஷன் பட்டனை புதிய ஐபோன் 15 சீரிஸில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் பல்வேறு செயல்பாடுகளுக்கான ஷாட்கட்களை ஆக்ஷன் பட்டன் மூலம் உருவாக்கிப் பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனமானது, 15 மாடல்களின் வெளிப்புறத்தில் அலுமினியம் ஃப்ரேமைப் பயன்படுத்தியிருக்கும் நிலையில், 15 ப்ரோ மாடல்களின் வெளிப்புறம் டைட்டானியம் கேசிங்கைப் பயன்படுத்தியிருக்கிறது. ப்ரோ மற்றம் ப்ரோ அல்லாத மாடல்களிடையே வேறுபாட்டைக் காட்ட ப்ரோ, மாடல்களில் டைட்டானியம் நிறங்களைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    ஐபோன் 15 சீரிஸ் டிஸ்பிளே: 

    புதிய ஐபோன் 15 சீரிஸின், 15 மற்றும் 15 ப்ரோ மாடல்களானது, 6.1 இன்ச் டிஸ்பிளேவுடனும், 15 ப்ளஸ் மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களானது, 6.7 இன்ச் டிஸ்பிளேவுடனும் வெளியாகியிருக்கிறது. ப்ரோ மாடல்களில் ஆப்பிளின் LIPO தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஐபோன்களின் பெசல்களின் அளவு சிறியதாக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்களில் 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவும், 15 ப்ரோ மாடல்களில் LTPO தொழில்நுட்பத்துடன் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 15 சீரிஸின் அனைத்து மாடல் டிஸ்பிளேக்களும் 2000 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

    ஐபோன் 15 சீரிஸ் ப்ராசஸர் மற்றும் கேமரா: 

    ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்களில், ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A16 பயானிக் சிப்பையே கொடுத்திருக்கிறது ஆப்பிள். இது எப்போதும் ஆப்பிள் பின்பற்றும் வழக்கம் தான். இந்த மாடல்களானது அதிகபட்சமாக 6GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியாகியிருக்கின்றன. 15 சீரிஸின் ப்ரோ மாடல்களில் புதிய மேம்படுத்தப்பட்ட 3nm A17 ப்ரோ பயானிக் சிப்பைக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். மேலும், ப்ரோ மாடல்களானது 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியாகியிருக்கின்றன. ஐபோன் 15 மாடல்களில் 48MP முதன்மைக் கேமராவும், 12MP அல்ட்ரா-வைடு கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 15 ப்ரோ மாடல்ளில் 48MP முதன்மைக் கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைடு கேமரா என ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஐபோன் 15 சீரிஸ் விலை: 

    முதன் முறையாக ஐபோன் 15 சீரிஸில் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் Qi2 வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வை-பை 6E கனெக்டிவிட்டி ஆகிய வசதிகளும் 15 சீரிஸ் ஐபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலைகள் பின்வருமாறு: ஐபோன் 15: ரூ.79,900 ஐபோன் 15 ப்ளஸ்: ரூ.89,900 ஐபோன் 15 ப்ரோ: ரூ.1,34,900 ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்: ரூ.1,54,900 இந்தியாவிலேயே ஐபோன் தயாரிப்பு தொடங்கப்பட்டிருப்பதால், தற்போது வெளியீட்டிலிருந்தே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை விற்பனை செய்யவிருக்கிறது அந்நிறுவனம். செப்டம்பர் 22ம் தேதி முதல், ஆப்பிள் தளங்கின் மூலம் புதிய ஐபோன் 15 சீரிஸை பெற்றுக்கொள்ள முடியும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆப்பிள்
    ஐபோன்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    கேட்ஜட்ஸ்

    ஆப்பிள்

    வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்? ஆப்பிள் தயாரிப்புகள்
    செப் 12 ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு, என்னென்ன அறிமுகங்கள்? ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? எலான் மஸ்க்

    ஐபோன்

    செப்டம்பர் 12ல் வெளியாகிறது புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள்
    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள்
    சார்ஜ் ஆகும் ஐபோன் அருகே தூங்க வேண்டாம் என எச்சரித்திருக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா? விராட் கோலி
    உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக் ஆப்பிள்
    ரூ.42 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்திருக்கும் ஆப்பிள் ஷூ ஆப்பிள்
    ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல் ஆப்பிள்

    கேட்ஜட்ஸ்

    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள் கூகுள்
    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி ரியல்மி
    வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ்
    சர்வதேச சந்தையில் புதிய 'மேஜிக் V2' ஃபோல்டபிள்ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர்  ஃபோல்டபிள் போன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023