பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது
ஆப்பிள் நிறுவனம் பல காரணங்களால் பணிநீக்கத்தை தவிர்த்து வருகிறது. உலகளவில் பல நிறுவனஙள் தொழில்நுட்ப மந்த நிலை காரணமாக பணிநீக்கம் செய்துவரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் பணிநீக்கம் செய்யாது என்று கூறியிருந்தது. அதன் பின்னர், உயர் பதவியில் உள்ள நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவிக்கையில், உயர்பதவியில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு நாளின் செயல்பாட்டிற்கும் மிகவும் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
புதிய தயாரிப்புகள், பயண செலவு குறைப்பு, உள்ளிட்ட நடவடிக்கைகள்
பணிநீக்கத்தைத் தவிர்க்க ஆப்பிள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அவை பின்வருமாறு. புதிய தலைமுறை HomePod திரையுடன் கூடிய அடுத்த ஆண்டு வரை Apple ஆல் தயாரிக்கப்படாது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் பல குழுக்களுக்கு புதிதாக பணியமர்த்துவதை நிறுத்தியுள்ளது, இதனால் பல்வேறு குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுவனம் குறைத்துள்ளது, மேலும், கூடுதலாக செலவினங்களுக்கு இப்போது மூத்த துணைத் தலைவரால் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று செய்திமடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஊழியர்களுக்கான பயணமும் குறைத்துள்ளது. ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று முறை அலுவலகத்திற்கு சென்றாள் போதும் என்றும் கூறியுள்ளது.