NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி
    AiTelly யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டைட்டன் நீர்மூழ்கி குறித்த அனிமேஷன் காணொளி

    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 14, 2023
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில், 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நொறுங்கி, அதில் பயணம் செய்து ஐந்து கோடீஸ்வரர்களும் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    நீர்மூழ்கி ஏன் நொறுங்கியது, எப்படி நொறுங்கிச் சிதறியது எனப் பல்வேறு கேள்விகள் அனைவரது மனதிலும் இருக்கும் நிலையில், அது குறித்த தெளிவான விளக்கக் காணொளி ஒன்றை அனிமேஷன் வடிவில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறது, AiTelly என்ற யூடியூப் பக்கம் ஒன்று.

    6 நிமிட நீளம் கொண்ட இந்த காணொளியானது பதிவிடப்பட்டு 13 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது 96 லட்சம் முறை யூடியூபில் பார்க்கப்பட்டிருக்கிறது.

    யூடியூப்

    எப்படி நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? 

    பொதுவாக, நீரில் மூழ்கக்கூடிய தன்மையுடைய பொருட்களைத் தயாரிக்கும் போது, அவை பயன்படுத்தப்படவிருக்கும் ஆழத்தைப் பொருத்து , அந்த நீர்நிலை அழுத்தத்தைக் தாங்கக்கூடிய அளவிலான பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

    உதாரணத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் எல்லாம், ஸ்டீல், டைட்டானியம் மற்றும் அலுமினியும் உள்ளிட்ட கடினமாக உலோகங்களைக் கொண்டு உருவாக்குவார்கள்.

    ஆனால், இந்த டைட்டன் நீர்மூழ்கியை, பரிச்சார்த்த முயற்சியாக கார்பன் ஃபைபரைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். அது பயணம் செய்த ஆழத்தில், ஒரு சதுர அங்குலத்திற்கு 2,500 கிலோ அழுத்தத்தைத் தாங்க வேண்டியிருந்திருக்கும்.

    ஆனால், அவ்வளவு அழுத்தத்தைத் தாங்க முடியாமலேயே நொறுங்கியிருக்கிறது டைட்டன் நீர்மூழ்கி. டைட்டன் நீர்மூழ்கி ஏன் நொறுங்கியது என்பது குறித்த அந்த விளக்கக் காணொளியை முழுமையாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    யூடியூப்
    யூடியூப் வியூஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு  இந்தியா
    "மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்! எலான் மஸ்க்
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம் இந்தியா

    உலகம்

    புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம் அமெரிக்கா
    டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது அமெரிக்கா
    ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா அமெரிக்கா
    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி ரஷ்யா

    யூடியூப்

    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்? மத்திய அரசு
    தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப் கேம்ஸ்
    பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம் சமூக வலைத்தளம்

    யூடியூப் வியூஸ்

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! தென் இந்தியா
    பிரபல யூடியூபர் மதன் கௌரி ஹீரோவாகிறாரா? திரைப்பட அறிவிப்பு
    போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி இந்தியா
    யூடியூப் வருமானம் மூலம் ஆடி காரை வாங்கிய இளைஞர்! யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025