விற்பனையாளர்களின் வருமானம் பாதிப்பு: விற்பனையில் 50% தொகையை கட்டணமாக பெறும் அமேசான்!
அமேசான் விற்பனை தளம் அளிக்கும் பல்வேறு தள்ளுபடி சலுகையால் வாங்குபவர்கள் எண்ணிக்கை மற்றும் விற்பனை அதிகமாக உள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் அமேசானின் விற்பனையின் சராசரியாக 50% அதிகரித்துள்ளது. ஆனால், அமேசான் தளத்தில் விற்பனை செய்யும் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் தொகையில் இருந்து 50% தொகையை அமேசான் பெற்றுக் கொள்கிறது. 2% அளவுக்கு அமேசானில் விற்பனை குறைந்துள்ளதால், அமேசான் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமேசான் செல்லர்கள் ஈட்டும் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமேசான் செல்லர்களால் விளம்பர செலவுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை
கடந்த ஆறு ஆண்டுகளாக, அமேசானில் இருக்கும் செல்லர்கள் அதிகமாக கட்டணம் செலுத்த வருகின்றனர். செல்லர்கள் அதிக சேவைகளைப் பயன்படுத்தியதால் இந்த கட்டணம் அதிகரிக்கவில்லை. செல்லர்கள் பயன்படுத்தி வந்த அதே சேவைகளின் விலை அதிகரித்துவிட்டன அல்லது தவிர்க்க முடியாததாகிவிட்டன. அமேசானின் விளம்பரம் அல்லது லாஜிஸ்டிக்ஸ்களுக்கு பணம் செலுத்துவது செல்லர்களின் விருப்பத் தேர்வு. ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் வணிகத்திற்கு அவை அவசியம் என்று கருதுகின்றனர். அமேசானின் லாஜிஸ்டிக்ஸ் சேவையானது பெரும்பாலான மாற்றுகளை விட 30% மலிவானதாக உள்ளது. இவை அனைத்தும், செல்லர்களின் வருமானத்தை பாதிக்கும்.