நாசா ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்!
நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம். நிலவில் மனிதர்களைத் தரையிறக்க பல்வேறு ஆர்டிமிஸ் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது நாசா. 2024-ல் ஆர்டிமிஸ் 2, 2025-ல் ஆர்டிமிஸ் 3, 2028-ல் ஆர்டிமிஸ் 4 மற்றும் 2029-ல் ஆர்டிமிஸ் 5 திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன. இதில் 2029-ல் செயல்படுத்தப்படவிருக்கும் 'ஆர்டிமிஸ் 5' திட்டத்தில் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் லேண்டரை உருவாக்குவதற்கா ஒப்பந்தத்தை தற்போது கைப்பற்றியிருக்கிறது ப்ளூ ஆரிஜின் நிறுவனம். இதனை தன்னுடைய ட்விட்டர் பதிவின் மூலம் ஜெஃப் பஸாஸ் உறுதி செய்திருக்கிறார். ஆர்டிமிஸ் 3 மற்றும் 4 திட்டங்களின் லேண்டரை உருவாக்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.